Recruitment of new female warriors for the 'Singapenn'special force: New update coming soon google
தமிழ்நாடு

சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு புதிதாக வீராங்கனைகள் தேர்வு: விரைவில் வெளியாகும் புதிய அப்டேட்!...

தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியான சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உருவாக்கப்பட்டு நடைமுறையில் செயல்பட்டு வருகிறது

Rohini

சிங்கப்பென் சிறப்பு அதிரடி படை

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழகம் பெண்கம் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறபு அதிரடி படை உருவாக்கபடும் என்று தெரிவித்திருந்தார், இது பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலெ முற்றிலும் செயல்படுவதாக இருக்கும் என்று தவெக அறிவித்திருந்த்து

முதல்வர் விஜயால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட சிங்கப்பெண் படை

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ,பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் , இந்த சூழலில் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஐ.ஜி.யாக பவானீஸ்வரி. ஒரு டிஎஸ்பி , 2 துணை டிஎஸ்பிக்கள் என 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக மே 29ம் தேதி தொடங்கி வைத்தார்

தனித்துவமாக தெரியும் வகையில் சீறுடை வடிவமைப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சின்னத்தில் தைரியம், வேகம், அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீருடை கருப்பு நிற தொப்பி. பெல்ட் கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் மற்றும் கருப்பு நிறத்திளாலான பெல்ட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

பயன்பாட்டிற்கு வந்த சிங்கப்பெண் சிறப்பு படை

தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் கையெழுத்தாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு கையெழுத்திட்டார் , இந்த படையில் அனைத்து தலைமை பொறுப்புகளையும் பெண்களே நிர்வகிப்பர். முதல்வர் விஜய் இந்த திட்டத்தினை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த பிறகு , தற்போது இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது,

இந்த சூழலில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு புதிய வீராங்​க​னை​கள் தேர்வு செய்​யப்பட இருப்பதாக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தமிழகத்​தில் பெண்​கள், குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​களைத் தடுக்​க​வும், பெண்​களின் பாது​காப்பை வலுப்​படுத்​த​வும், அவசர காலங்​களில் துரித​மாக களமிறங்கி நடவடிக்கை எடுக்​க​வும், பெண்​கள் மட்​டுமே இடம்​பெறும் ‘சிங்​கப்​பெண்’ சிறப்பு அதிரடிப் படை கடந்த ஜூன் மாதம் தொடங்​கப்​பட்​டது. இந்த படை தற்​போது சென்னை டிஜிபி அலு​வலக வளாகத்​தில் தற்​காலிக​மாக செயல்​படு​கிறது.

இந்​நிலை​யில், டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் உத்​தர​வுப்​படி,சென்னை அசோக் நகரில் உள்ளகாவல் பயிற்​சிக் கல்​லூரி வளாகத்​தில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை​யின் நிரந்தர தலை​மையகத்தை அமைக்க ஐ.ஜி. பவானீஸ்​வரி நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளார். இதையொட்​டி, அலு​வலக கட்​டமைப்​பு, கட்​டுப்​பாட்டு அறை, தகவல் தொடர்பு மையம் உள்​ளிட்ட பணிகள் நடந்து வரு​கின்​றன

அசோக் நகரில் உள்ள காவல் பயிற்​சிக் கல்​லூரி வளாகம் ஏற்​கெனவே தமிழக காவல் துறை​யின் முக்​கிய புல​னாய்வு மற்​றும் சிறப்புப் பிரிவு​களின் மைய​மாக விளங்கி வரு​கிறது. மாநில சைபர் க்ரைம், பொருளா​தார குற்​றப்​பிரிவு, சிலை கடத்​தல் தடுப்​பு, பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்பு என பல்​வேறு முக்​கிய பிரிவு​கள் இங்கு இயங்கி வரு​கின்​றன.

அதே வளாகத்​தில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை தலை​மையக​மும் அமைக்​கப்​படு​வ​தால், ஒருங்​கிணைந்த காவல் நிர்​வாகம், விரை​வான தகவல் பரி​மாற்றம் மற்​றும் அவசர நடவடிக்​கைகளை மேலும் திறம்பட மேற்​கொள்ள முடி​யும் என்று அதி​காரி​கள் நம்​பிக்கை தெரி​வித்​தனர்.

தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கும் பணி தீவிரம்

சிங்​கப்​பெண் அதிரடிப் படையை தொழில்​நுட்ப ரீதி​யாக வலுப்​படுத்​தும் வகை​யில், அதிநவீன ட்ரோன்​கள், கண்​காணிப்பு உபகரணங்​கள், நவீன தகவல் தொடர்பு சாதனங்​களை வாங்​கும் நடவடிக்​கை​யும் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கூட்ட நெரிசல் பகு​தி​கள், முக்​கிய விழாக்​கள், பெண்​கள் பாது​காப்பு பணி​கள் மற்​றும் அவசர மீட்பு நடவடிக்​கை​களில் இந்த ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன

துடிப்​புமிக்க 2,500 பெண் காவலர்​களை இந்த படைக்கு புதி​தாக தேர்வு செய்​யும் வகை​யில், விதி​முறை​களை இறுதி செய்​யும் பணி​யும் நடந்து வரு​கிறது. வயது வரம்​பு, உடல் தகு​தி, கல்​வித் தகு​தி, தொழில்​நுட்ப அறி​வு, மன உறு​தி, சிறப்பு பயிற்​சிக்​கான திறன் உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​களின் அடிப்​படை​யில் எழுத்து மற்​றும் உடல் தகுதிதேர்வு நடை​முறை வகுக்​கப்​பட்டுவரு​கிறது. இது தொடர்​பான அதி​காரப்​பூர்வ அறி​விப்பு விரை​வில் வெளி​யிடப்பட உள்​ள​தாக டிஜிபி தெரி​வித்​துள்​ளார்.

அமல்படுத்தப்பட்ட சில நாள்களிலேயே குற்றங்கள் தடுப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பல்வேறு வகையான பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக 10க்கும் மேற்ப்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்தி நிறுத்தப்பட்டுள்ளது . பலவேறு குழந்தைகள் மீட்கப்ப்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

============================