Cauvery River Flood Due To Karnataka Dams Water Release Today 
தமிழ்நாடு

ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் : பொங்கிப் பாயும் காவிரி

Cauvery River Flood Today : கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், காவிரியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

Kannan

தீவிரமடைந்துள்ள பருவமழை :

Cauvery River Flood Today : கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டி இருக்கின்றன. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரால் காவிரியில் வெள்ளம்பெருக்கெடுத்து பாய்கிறது.

காவிரியில் கடும் வெள்ளம் :

வினாடிக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், ஒகேனகல்லில் ஆர்ப்பரித்து பாய்கிறது காவிரி. இதனால், ஆற்றில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. தமிழக பகுதிக்குள் இருகரைகளையும் தொட்டவாறு, மேட்டூர் அணையை(Mettur Dam Water) நோக்கி பொங்கும் புனலாய் பெருக்கெடுத்து ஓடி வருகிறது காவிரி.

கடல்போல காட்சியளிக்கும் மேட்டூர் :

தொடர் நீர்வரத்து காரணமாக நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது(Mettur Dam Water Level Today). இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர்வரத்து ஒரு லட்சத்து 500 கனஅடியாக உள்ளது. ஒரு லட்சத்து 500 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு, சாகுபடி அமோகமாக இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

======