Reports indicate possibility of Tamil Nadu government's new Secretariat located in Pattinapakkam AI generated
தமிழ்நாடு

25 ஏக்கர்,15 மாடி கட்டிடம் : புதிய தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் கிரீன் சிக்னல் : பட்டினப்பாக்கத்தில் அமைகிறதா...!

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைய அதிக வாய்ப்புகள் இருபதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Kannan

புதிய தலைமைச் செயலகம்

New Assembly Secretariat To Come Up At Foreshore Estate Pattinapakkam Chennai :

இடநெருக்கடி மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு, சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசுக்கு புதிய சட்டமன்ற வளாகம் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அண்மையில் அறிவித்து இருந்தார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்?

இந்நிலையில் புதிய தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமையவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. 25.16 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்திற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் ஆரம்ப கட்ட ஒப்புதல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வேகம் காட்டும் விஜய் சர்க்கார்

இதையடுத்து திட்டத்திற்கான கொள்கை ரீதியான அனுமதி அளித்து விரைந்து உத்தரவை பிறப்பிக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு வேகம் காட்டுகிறதாம்.

மொத்த மதிப்பு ரூ. 3, 247 கோடி

சாந்தோம் பிரதான சாலையிலிருந்து அணுகலை கொண்டுள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த நிலத்தில் ஒரு சதுர அடியின் மதிப்பு 22 ஆயிரம் ரூபாயாகும். அதன்படி, இந்த நிலத்தின் உத்தேச மதிப்பு மட்டுமே சுமார் 2 ஆயிரத்து 47 கோடி ரூபாயாக உள்ளது.

கட்டுமான செலவிற்கே ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 3 ஆயிரத்து 247 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது.

15 மாடிகள், 20 லட்சம் சதுர அடி

புதிய தலைமை செயலகத்திற்கான பிரதான கட்டிடமானது 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாடிகளை கொண்டதாக இருக்குமாம்.

புதிய தலைமை செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதி, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நந்தம்பாக்கத்தில் ஃபிண்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள ஒரு இடம் ஆகிய மூன்று தளங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

எளிதில் அணுகும் இடத்தில் தலைமைச் செயலகம்

இந்நிலையில் நகரின் மையப்பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்களை எளிதாக அணுகும் வகையில் 25 ஏக்கர் நிலம் கிடைப்பதால் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை தொடர்ந்து மயிலாப்பூர் எல்லைக்கு உட்பட்ட 21.37 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த, பொதுத்துறைக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆரம்பகட்ட அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

1958-ஆம் ஆண்டில் வீட்டுவசதித் திட்டங்களுக்காக பட்டினப்பாக்கம் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதுபோக பொதுத்துறைக்கு 0.93 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

வருவாய்த் துறையின் கீழ் உள்ள சில கூடுதல் நிலங்களையும் சேர்த்தால், இந்த திட்டம் ஒட்டுமொத்தமாக 26.5 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்று இடம் வழங்கக் கோரிக்கை

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் 1963 மற்றும் 1968-க்கு இடையில், 1,112 அரசு ஊழியர் குடியிருப்புகளும் 96 தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும் கட்டப்பட்டன. 1986-ல் மேலும் 60 குடியிருப்புகளும், 1998-ல் 112 குடியிருப்புகளும் கட்டப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 1,380 ஆக உயர்ந்தது.

இவற்றில், 1,284 குடியிருப்புகள் சிதிலமடைந்திருந்தன. கட்டிடங்கள் இடிக்கப்பட்டதிலிருந்து, அந்த இடம் காலியாகவே உள்ளது. இதுபோக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், தனக்குச் சொந்தமான 96 குடியிருப்புகளை இடிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

===============