Good News for Chennai Residents: Free Wi-Fi Facility Coming to Marina and Besant Nagar Beaches -TN Ai Generated
தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு ஒரு நற் செய்தி : வருகிறது இலவச wi-fi வசதி மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ...

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் பீச் உள்பட 32 இடங்களில் ஜென்சி இளைஞர்களுக்கு குட்நியூஸ் அறிவித்தது தமிழக அரசு...

NARENDRAN K

பொதுமக்களுக்கு இலவச wi-fi வசதி :

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் இலவச wi-fi அமைப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில் தற்பொழுது அது குறித்தான ஒரு செய்தி வெளியாகி உள்ளது அது என்னவென்றால் மெரினா கடற்கரைக்கு தினம் தோரும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதுவே விடுமுறை நாட்களில் அது மேலும் அதிகரித்து நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்றனர். எனவே இந்த இடங்களில் wi-fi வசதி அமைத்தல் அது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பலர் தெரிவித்தனர்

விரைவில் நடைமுறைக்கும் வரும் என தகவல் :

இந்த திட்டமானது விரைவில் நடைமுறைக்கு வரும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டு இருக்கிறது அது மட்டும் அல்லாமல் இந்த இணைய வசதி நடைமுறைப்படுத்த பட்ட பிறகு அது அங்கு வர கூடிய சுற்றுலா பயணிகளின் வரவேற்பையும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மெரினா முதல் பெசன்ட் நகர் வரை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில், "சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் முதற்கட்டமாக மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டை பெறும் வகையில் இலவச 'வைபை' வசதிக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் 32 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 5 இடங்களிலும் இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் செல்போனில் 'வைபை' ஆன் செய்து 'கிளிக்' செய்தவுடன் வரும் கியூ-ஆர் கோட்டை 'கிளிக்' செய்து செல்போன் எண்ணுக்கு வரும் ஒ.டி.பி. எண்ணை பதிவு செய்த உடன் 'வைபை' இணைப்பு ஏற்படும். இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டில் இல்லாத 'வைபை' வசதியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், புதிய 'வைபை' வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

============