அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு
தமிழகத்தில் அரிசி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில ரகங்களின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
மூடைக்கு ரூ.600 வரை உயர்வு
25 முதல் 30 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளின் விலையும் ரகத்தைப் பொறுத்து ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்துள்ளது.
கிலோ ரூ.100ஐ தொடுமா?
இந்நிலையில், தீபாவளிக்கு முன்பு சில அரிசி ரகங்களின் விலை கிலோ ரூ.100-ஐ தொடக்கூடும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
நெல் வரத்து மேலும் குறைந்து, தீபாவளி கால தேவை அதிகரித்தால் சில அரிசி ரகங்களின் விலை அந்த அளவுக்கு செல்லக்கூடும் என்பதுதான் கவலைக்குரிய விஷயமாகி இருக்கிறது.
இதையும் படிங்க : Top 5 Mutual Funds : 5 வருடத்தில் அதிக SIP ரிட்டர்ன் கொடுத்த ஃபண்டுகள் எவை? முழு லிஸ்ட் இதோ!
தற்போதைய சந்தை நிலவரம் குறித்து வெளியான தகவல்களின்படி, 25 கிலோ மூட்டையின் விலை :
டீலக்ஸ் பொன்னி: ரூ.1,400 - ரூ.1,800
பொன்னி: ரூ.1,600 - ரூ.1,950
வெள்ளை பொன்னி: ரூ.1,900 - ரூ.2,300
இட்லி அரிசி: ரூ.900 - ரூ.1,200
பச்சரிசி: ரூ.1,500 - ரூ.1,800
சிவாஜி பொன்னி: ரூ.1,800 - ரூ.2,400
மேலும், 30 கிலோ பாஸ்மதி அரிசி மூட்டையின் விலை ரூ.3,300-ல் இருந்து ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரே மாதத்தில் இதை சிறிய உயர்வாக பார்க்க முடியாது. எல்லா ரக அரிசி விலைகளும் அதிகரித்து இருப்பது கவலைக்குரிய விஷயம் தான்.
பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களிலும் நெல் சாகுபடி குறைந்து விட்டதே இந்த விலையேற்றத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
===================