Rising Custodial Deaths in Tamil Nadu: Government Remains Silent; Will a Solution Be Found?  google
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காவல் மரணங்கள் : தலைவர்கள் கண்டனம், மெளனம் காக்கும் அரசு, தீர்வு எட்டப்படுமா..?

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு , தமிழகத்தில் காவல் மரணங்களின் இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்துள்ளனர்

Rohini

அதிகரிக்கும் காவல் மரணங்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் காவல் மரணங்கள் என்பது தொடர்கதையான ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்ற பிறகு மூன்றிக்கும் மேற்ப்பட்ட காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் , காவல் மரணங்கள் அதிகம் நிகழும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு

தூத்​துக்​குடி​யில் காவல்​துறை விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட இளைஞர் உயி​ரிழந்த நிலை​யில், தமிழகத்​தில் காவல் மரணங்​கள் தொடர் கதை​யாகி வரு​வ​தாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இதற்கு முன்னர் , சபரிவர்மன் என்பவர் காவல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் , சிறையில் மரணமடைந்த விவகாரத்தில் 3 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட்ருக்கும் நிலையில் போலீசார் மருத்துவ பரிசோதனை நடத்தி சிறையில் அடைத்த கைதியை வார்டன்கள் அடித்தே கொன்றதாக புகார் அளிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது

தொடரும் காவல் மரணங்களுக்கு அரசியல் தலைவர்கள் கணடனம்

திமுக தலைவர் ஸ்டாலின்

தூத்துக்குடி இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி

தூத்​துக்​குடி​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட இளைஞர் அருணாச்​சலம், காவலர்​களின் தாக்​குதலுக்கு ஆளாகி உயி​ரிழந்​திருப்​பது வேதனையளிக்​கிறது.

போலீ​ஸார் தனக்கு இழைத்த அநீ​தியை தனது இறுதி நிமிடங்​களில் அருணாச்​சலமே எடுத்து சொன்​னதைப் பார்க்​கும்​போது நெஞ்​சம் கலங்​கு​கிறது.

காவல்​துறைக்கு பொறுப்பு வகிக்​கும் முதல்​வர், கடும் நடவடிக்​கைகளை எடுக்​காமல் மவுனம் காப்​ப​தால், இத்​தகைய சம்​பவங்​கள் தொடர்​கின்​றன.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: தூத்​துக்​குடி​யில் இளைஞர் அருணாச்​சலம் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்டு உயி​ரிழந்​துள்ள சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​துகிறது. தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்​திலேயே காவல் மரணங்​கள் தொடர்​கதை​யாக மாறி​விட்​டன.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து காவல் மரணங்களை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்

திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளதாவது

நாகர்​கோ​விலைத் தொடர்ந்து தூத்​துக்​குடி​யிலும் காவல்​துறை​யின் சித்​ர​வதைக்கு உள்​ளாகி இளைஞர் ஒரு​வர் உயி​ரிழந்​திருக்​கும் செய்தி வேதனையளிக்​கிறது.

காவல்​துறைக்கு பொறுப்பு வகிக்​கும் முதல்​வர் உட்பட பல அமைச்​சர்​களும், அதி​காரி​களும் திரைப்​படம் பார்க்க விடுப்​பில் சென்​றுள்​ள​தால், தமிழகத்​தில் ‘அரசு’ என்ற ஒன்று உள்​ள​தா? என்​பதே சந்​தேகம்​தான் என்றும் தெரிவித்திருக்கிறார்

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் காவலில் அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்திருப்பது கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

பாமக தலை​வர் அன்புமணி

ஏற்​கெனவே நாகர்​கோ​வில் சிறை​யில் விசா​ரணைக் கைதி சிறைத்​துறை​யின​ரால் தாக்கி கொல்​லப்​பட்​ட​தாக எழுந்த குற்​றச்​சாட்​டு​களின் பதற்​றம் தீரும் முன்பே இன்​னொரு விசா​ரணை கைதி மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்​திருப்​பது அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அளிக்​கிறது. இந்த உயி​ரிழப்பு குறித்து சிபிஐ விசா​ரணைக்கு அரசு ஆணை​யிட வேண்​டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

உரிய தீர்வு காணப்படுமா

தமிழக்த்தில் தொடரும் இந்த காவல் மரணங்களுகளில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நீதி கிடைப்பதை நீதித் துறையும் அரசும் உறுதி​செய்​வதுடன், கைதுசெய்​யப்​படும் நபரின் பாது காப்​புக்கும் முழுமை​யாகப் பொறுப்​பேற்க வேண்டும்.

==============================