Rising summer heat: 360 health centers in Chennai ready to provide treatment  google
தமிழ்நாடு

அதிகரிக்கும் கோடை வெப்பம் :சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள்

சென்னை மாநக​ராட்சி சார்​பில் 360 சுகா​தார நிலை​யங்​கள் தயார் நிலை​யில் இருப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

Rohini

அதிகரித்து வரும் கோடை வெப்பம்

கத்திரி வெயில் காலம் முடிவடைந்திருக்கும் நிலையிலும் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையானது வீசும் என்றும் , மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டாலும் ,

சென்னை மற்றும் இதர பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

உலகின் அதிகமான வெப்பத்தின் பிடியில் இந்தியா

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் பிடியில் இந்தியா தொடர்ந்து சிக்கித் தவிக்கும் வேளையில் 47.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உலகின் அதிக வெப்பமான நகரமாக பண்டா உருவெடுத்தது.

உபி மாநிலத்தில் உள்ள பண்டா, கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை உலகின் வெப்பமான நகரமாக உருவெடுத்துள்ளது.

அதற்கு முன்னர் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பண்டாவில் வெப்பநிலை அதிகளவாக 49.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.

வெப்ப அலை எதிரொலி : தயார் நிலையில் சிகிச்சை வாகனங்கள்

கோடை வெப்​பத்​தால் ஏற்​படும் நோய்​களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநக​ராட்சி சார்​பில் 360 சுகா​தார நிலை​யங்​கள் தயார் நிலை​யில் இருப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

வர் வெளி​யிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்​தில் கடந்த சில நாட்களாக கோடைவெப்​பம் அதி​கரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளி​யேறும்​போது உடலில் உப்​புச்​சத்து மற்​றும் நீர்ச்​சத்து பற்​றாக்​குறை ஏற்​படு​கிறது.

வெளியே செல்​லும்​போது, திறந்​தவெளி​யில் வேலை செய்யும்​போது தலை​யில் பருத்தி துணி, துண்​டு, தொப்பி அணிந்து கொள்ள வேண்​டும். தேவை​யில்லாமல் வெயி​லில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்​டும்.

தீவிர மயக்​கம், உடல் சோர்​வு, அதிக அளவு தாகம், தலை​வலி, கால், மணிக்​கட்டு அல்​லது அடி வயிற்​றில் வலி ஏற்​பட்​டால் மருத்​துவ உதவியை நாட​வேண்​டும். நாடித்​துடிப்​பு, இதயத்​துடிப்​பு, சுவாசம் ஆகிய​வற்றை பரிசோ​திக்க வேண்​டும்.

வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்

சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட 140 நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், 200 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள், 16 நகர்ப்​புற சமூக நல மையங்​கள், 3 மகப்​பேறு மருத்​து​வ​மனை​கள்,

தொற்று நோய் மருத்​து​வ​மனை என மொத்​தம் 360 சுகா​தார நிலை​யங்​கள் வெப்​பம் தொடர்​பான நோய்​கள் குறித்து சிகிச்சை வழங்​கு​வதற்கு தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. வெயில் அதி​கம் உள்ள நேரங்​களில் 57 வீடற்​றோர் காப்​பகங்​களில் பொது​மக்​கள் தங்​கிக் கொள்​ளலாம் என்றும் தெரிவித்துள்ளது

=================