Election Commissioner Archana Patnaik Announces Funds Allocated for TN Assembly Elections 2026 :
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: ரூ.1,302 கோடி ஒதுக்கீடு
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.
ஆயத்த பணிகள், பாதுகாப்பு நடவடிக்கை - அர்ச்சனா பட்நாயக் தகவல்
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க எத்தனை கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சன பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி
அதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
2021, 2024 தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
மேலும் கடந்த 2021 ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ. 975 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அதேபோல் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1009 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை நடத்த ஒதுக்கப்பட்ட நிதியை விட தற்போது அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பணம் பறிமுதல் மற்றும் பாதுகாப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை பறிமுதல் செய்யப்பட்டவை
உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.462 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பதற்றமான வாக்குசாவடிகள்
தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் மொத்தம் 5,938 வாக்குச்சாவடிகள் 'பதற்றமானவை' என கண்டறியப் பட்டுள்ளதாகவும் இங்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும்,
துணை ராணுவம் வருகை
தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும் வரும் ஏப்ரல் 13-க்குள் துணை ராணுவப் படையினர் தமிழகம் வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2,50,000 தபால் வாக்குகள் பதிவு
கூடுதல் தகவலாக இதுவரையில் 85 வயதிற்கு மேற்பட்ட இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் தபால் வாக்காளர்களாக பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தகவல் கூறியுள்ளார்.