Rs. 2 per unit discount electricity bill 25% subsidy purchasing electric stoves Tamil Nadu government announcement google
தமிழ்நாடு

மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை..மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அறிவிப்பு!

ஈரான் அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் சமையல் எரிவாயு தட்டுப்பாடானது ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து தமிழக அரசுமின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை வழங்கியிருக்கிறது

Rohini

தொடரும் போர் பதற்ற சூழல்

தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் இஸ்ரேல் அமெரிக்க போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சுழலானது நிலவி வருகிறது. குறிப்புக வளைகுடாநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் கச்ச எண்ணெய் வரத்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் எரிபொருட்களின் பயன்பாட்டிற்கான தேவை பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது

எரிபொருள் தட்டுப்பாடு

கச்ச எண்ணெய் இறக்குமதியில் பெரும் தட்டுப்பாடானது ஏற்பட்டிருக்கும் நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றிக்கான தட்டுப்பாடானது பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் .சமயல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடும் பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது,இதில் முன்பதிவிற்கான சிக்கல்களையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

மின்சார யூனிட்டிற்கு ரூ. 2 மானியம்: தமிழக அரசு

இந்த எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலியால் மக்கள் மின்சார அடுப்பு பயன்பாட்டிற்கு மாறியுள்ளனர் ,உணவகங்கள் மூடப்பட்டிருக்கும் எதிராளியின் காரணமாக தமிழக அரசு அந்த வகையில், உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவிற்கு (LPG) பதிலாக மின்அடுப்புகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது .

ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது

மின்சார அடுப்பு வாங்க 25% மானியம்

எரிவாயு (LPG) பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின் அடுப்புகள் மின் சூடேற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ். 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக 3.75 இலட்சம் ரூபாய் மானியத்துடன் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவிகிதம் அல்லது 2 இலட்சம் ரூபாய் மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கவும் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரை மானியத்துடனும் கடன் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு எரிபொருள் :கடன் உதவி திட்டங்கள்

தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைகளை பெற்று, LPG, CNG, டீசல், பர்னஸ் ஆயில், விறகு போன்றவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி இயங்கி வருகின்றது.

இந்நிறுவனங்கள் LPG, CNG போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மண்ணென்ணை, RDF, HSD. பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இதற்கு தமிழ்நாடு LDITOR கட்டுப்பாடு வாரியத்தின் (CTE/CTO) பெற தேவையில்லை, தகவல் தெரிவித்தால் மட்டும் போதுமானது எனவும் அறிவிப்பை தெரிவித்துள்ளது

ஒன்றிய அரசு அறிவித்துள்ள LPG, CNG பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் கால அவகாசம் வரை இந்த விலக்கு அமலில் இருக்கும் எனவும் இந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது