S.A. Chandrasekhar said, If Congress comes forward to seize the opportunity given by Vijay, can come back to power 
தமிழ்நாடு

விஜய் கொடுக்கும் வாய்ப்பு, காங்கிரசுக்கு அதிகாரம்: எஸ்ஏசி அட்வைஸ்

SA Chandrasekhar Speech About TVK Congress Alliance : “விஜய் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் முன் வந்தால், மீண்டும் அதிகாரத்துக்கு வரலாம்” என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Kannan

தனித்து போட்டியிடும் தவெக

SA Chandrasekhar Speech About TVK Congress Alliance : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டது. திமுக, பாஜகவை கடுமையாக எதிர்க்கும் விஜய் பக்கம் இன்னும் எந்தக் கட்சியும் கூட்டணிக்காக செல்லவில்லை. விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் தவெக உறுதியாக இருக்கிறது.

தவெக கூட்டணி - செல்வது யார்?

பாமகவின் ராமதாஸ் தரப்பு, தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர், தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலர், திமுகவை விமர்சித்து, விஜயை புகழ்வது காங்கிரஸ் எந்த நிலைப்பாட்டை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயால் காங்கிரசுக்கு ஆதாயம்

கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதில் விஜய் உறுதியாக நிற்கிறார். அந்த வகையில், காங்கிரஸ் அந்தக் கூட்டணிக்கு சென்றால், தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. கேரளா, புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும் விஜயின் செல்வாக்கு காங்கிரசுக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே வலுத்து வருகிறது.

60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள்

இந்தநிலையில், திருவாரூரில் பேட்டியளித்த நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர், “60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வருகின்றனர். புதிதாக யாராவது அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

ஜனநாயகன்’ மக்களுக்கு தெரியும்

ஜனநாயகன் பட பிரச்சனையில் என்ன நடக்கிறது என்பது என்னை விட மக்களுக்கு நன்கு தெரியும். மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் வருபவர்களுக்கு இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

விஜய் எதற்கும் பயப்பட மாட்டார்

கரூரில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெளிவாக தெரியும். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதற்கும் பயந்தவர் இல்லை. விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு சரித்திரம் இருக்கு பாரம்பரியம் உள்ளது. வரலாறு இருக்கிறது. அப்படி வரலாறு உள்ள ஒரு கட்சி இன்று தேய்ந்து விட்டது. என்ன காரணம் என்றால் மற்ற கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து அந்தக் கட்சி இன்று தேய்ந்து விட்டது.

காங்கிரசுக்கு அதிகாரம் கொடுக்க தயார்

அவர்களுக்கு இன்று பவர் இல்லை. அந்த பவரை நாங்கள் கொடுக்கிறோம் என விஜய் கூறுகிறார். அந்தப் பவருக்கு காங்கிரஸ் வந்தால் காங்கிரஸ் மீண்டும் வரலாறு படைக்கும் அந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என சந்திரசேகர் கேட்டுக் கொண்டார்.

======================