Sivakasi Fireworks Factory Blast Accident Today in Tenkasi 
தமிழ்நாடு

Sivakasi Fire Accident: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி..

Sivakasi Fireworks Blast Accident Today : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

Kannan

சிவகாசி பட்டாசு தயாரிப்பு :

Sivakasi Fireworks Blast Accident Today : உலக அளவில் பட்டாசு தயாரிப்புக்கு பெயர் போனது சிவகாசி, இங்கு ஆண்டு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொதுவாக பண்டிகை நாட்கள், கோயில் திருவிழாக்களின் போது பட்டாசுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையின் போது பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் விற்கப்பட்டு, தீபத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும்.

பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு தயாரிப்பு :

ஆண்டு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், உரிய அனுமதியின்றி ஆலைகள் செயல்படுகின்றனவா என்றால், இல்லை என்ற பதிலே கிடைக்கும். பல இடங்களில் எந்த பாதுகாப்பும் இன்றி, எளிதில் தீப்பற்றி வெடிக்கக் கூடிய வெடிமருத்துகளை கையாண்டு தொழிலாளர்கள் பட்டாசுகளை தயாரிக்கின்றனர்.

தொடர் கதையாகும் உயிரிழப்புகள் :

இதனால், வெடி விபத்துகள் நிகழ்ந்து உயிர்கள் பறிபோவது சாதாரண நிகழ்வாகி விட்டது. பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதோடு, தன் கடமை முடிந்து விடுவதாக அரசும் நினைக்கிறது. அந்த வகையில், ஆண்டியபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில்(Andiyapuram Fireworks Factory Blast) இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள ஒரு அறையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்தன.

தரைமட்டமான பட்டாசு ஆலை :

இதனால், பட்டாசு ஆலை தீப்பிழம்பாக காட்சியளித்தது. பல நூறு மீட்டர் தூரத்திற்கு பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலை விபத்து - மூவர் பலி :

இந்த வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்(Sivakasi Fireworks Death). மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிபோகும் உயிர்கள், கேள்விக்குறியாகும் பாதுகாப்பு :

முறையான அனுமதியின்றி பட்டாசு ஆலைகளை(Firecrackers Factory) இயக்குவது, பாதுகாப்பு உபகரணங்கள் இன்மை, கூலிக்காக உயிரை பணயம் வைத்து வரும் தொழிலாளர்கள் என இந்த அவலம் அடிக்கடி நடப்பதுதான் உச்சபட்ச வேதனை. வெடிவிபத்து தொடர்ந்து பட்டாசு ஆலையின் உரி்மம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

=====