Safety of girl children in schools: Minister Rajmohan explains the government's best initiative  google
தமிழ்நாடு

பள்ளிகளில் பெண் குழந்தை பாதுகாப்பு : அரசின் சிறந்த முன்னெடுப்பு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்னறிவிப்புகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Rohini

பள்ளிகல்வி துறை அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் ராஜ்மோகன்

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிகழகம் பெரும்பான்மையான வாக்குளை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. எழும்பூர் சட்டப்பேரவை தொகுதியில் களம் கண்ட ராஜ்மோகன் பள்ளிகல்விதுறை மற்றும் செய்திதொடர்பு அமைச்சராக பதவியேற்றார்

பள்ளிகளில் பெண்களின் பாதுகாப்பு பற்றி விளக்கம் அளித்த அமைச்சர்

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பல்வேறு இடங்களில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசு ஒரு புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே உதவி எண்கள்

பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு புதிய பாடநூல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்த புத்தகங்களின் முதல் பக்கத்திலேயே இரண்டு விதமான இலவச அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்

இந்த அவசர எண்களை தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை

குழந்தைகள் பள்ளிகளில் ஏதாவது பிரச்சனைகளை சந்திக்கும் நேரத்தில் இந்த இரண்டு எண்களை தொடர்புக் கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்தும் புத்தகங்களில் இடம்பெற்று இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

போக்சோ வழக்கு குறித்தும் வழிக்காட்டல்

மேலும், போக்சோ போன்ற வழக்குகளில் அதை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

முக்கிய துறைகள் உதவியுடன் தண்டனை பெற்று தரப்படும்

ஒரு பெண் குழந்தைக்கு இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் உடனே அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்

ஒரு போக்சோ வழக்கு பதிவானாலும், பள்ளிக்கல்வி துறை, காவல்துறை, நீதித்துறை மற்றும் சமூகநீதித் துறை ஆகிய நான்கு துறைகள் அந்த வழக்குகளில் உறுதுணையாக நின்று 12 மாதங்களில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

==============