Sahitya Akademi Award Announcement for Tamil Writer S. Tamilselvan google
தமிழ்நாடு

”தடங்கள் இலக்கிய விமர்சன நூல்” : எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

Sahitya Akademi Award Announcement for Tamil Writer S. Tamilselvan : தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது

Rohini

2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது

Sahitya Akademi Award Announcement for Tamil Writer S. Tamilselvan : தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதானது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்​வு​களுக்கு போன்றவற்றிற்காக ,சிறந்த படைப்பு என்ற முறையில் சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்​கப்​படு​கின்​றன

சிறந்த நாவல் "தமிழ் சிறுகதைகளின் தடங்கள்"

2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது குறித்து எழுத்தாளர் கூறியதாவது

இவ்விருது குறித்து அவர் கூறும்போது ‘தனக்கு இந்தப் புத்தகத்தை எழுத 2 ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் . 50-க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்ச்செல்வனுக்கு ஏற்கெனவே சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட இருந்த நிலையில் அது பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பின்னணி

தூத்துக்குடியை சேர்ந்த இவர், இலக்கிய பின்னணி குடும்பத்தை சேர்ந்த இவர் ,எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகவியலாளர் முருகபூபதி ஆகியோர் இவரது சகோதரர்கள்.

18 வயதில் தொடங்கிய தமிழ்ச்செல்வனின் எழுத்துலக பயணம், இப்போது வரை நீள்கிறது. அவரது படைப்புகளில் 'ஒரு சாப்பாட்டு ராமனின் கதை' என்கிற படைப்பு மிகவும் வித்தியாசமானது. தற்போது தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற இலக்கிய விமர்சன நூலுக்காக ச.தமிழ்ச்செல்வன் சாகித்ய அகாடமி விருதினை பெறுகிறார்.