Sanitary Workers Secondary School Teachers Arrested for Protest Against DMK Government in Tamil Nadu Google
தமிழ்நாடு

கைதான தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் : முழு விவரம் இதோ!

Teacher Arrest: திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் ‘சமவேலைக்கு சமஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்​றுகை​யிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

Baala Murugan

திமுக ஆட்சியில் தொடர் போராட்டம்

Secondary School Teachers Arrested for Protest in Tamil Nadu : இடைநிலை ஆசிரியர்கள் தமிழகத்தில் தொடரந்து சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதாவது, அரசு மற்​றும் அரசு உதவி​ பெறும் பள்​ளி​களில் 31.5.2009-ல் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்​களுக்​கும் அதற்கு பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை சம்​பளத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு இருந்து வரு​கிறது.

ஊதிய முரண்​பாட்டை கண்​டித்து சமவேலைக்கு சமஊ​தி​யம் என்ற கோரிக்​கையை வலியுறுத்தி நீண்ட கால​மாக பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மைப்பணியாளர்கள்

இந்​நிலை​யில், நேற்று (டிச.26) காலை 10.30 மணிக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் உள்​ளிட்ட கல்​வித்​துறை அலு​வல​கங்​கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டம் நடத்​தினர்.

அவர்​களை போலீ​ஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாக​னங்​களில் ஏற்​றினர். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக ‘சமவேலைக்கு சம ஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி இன்று (டிச., 27) சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்​றுகை​யிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், திமுக அரசுக்கு எதிரான போரட்டங்களும் வெடித்துள்ளது.

தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை பாரிமுனையில் தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.