9 பேருக்கும் மரண தண்டனை
Sathankulam Case Judgement Today in Tamil : காவல் நிலைய போலீஸார் விசாரணையின் பொது உயிர் இழந்த விவகாரத்தில்
காவலர்கள் 9 பேரும் குற்றாவளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை கூடுதல் உயர்வு நீதிமன்றம் தீர்ப்பு
தண்டனை விவரம் அறிவிப்பு
மரண தண்டனை விதிப்பதே சிறந்தது என்றும் , குற்றத்தை புரிந்தவர்கள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள் ,படித்தவர்கள் எனவே இது சாதாரண குற்றமாக கருத முடியாது நீதிபதி கருது தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.கூடுதலாக 10 லட்சம் அபராதம் வழங்கியுள்ளது ,மேலும் குற்றம் புரிந்த 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இரட்டை கொலை வழக்கின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் செல்போன் கடை நடத்தி வந்த நிலையில்,
கடந்த 2020 ஜூன் 19-ல் ஊரடங்கு நேரக் கட்டுப்பாடு தாண்டி கடையை திறந்து வைதிருந்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு
காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகன் இருவரையும் போலீஸார் விசாரணையின் பேரில் கடுமையாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த நிலையில் முதலில் பெனிக்ஸ், பின்னர் ஜெயராஜ் ஆகியோர் காவல் விசாரணையின்போதே உயிரிழந்தனர்.
சிபிஐ விசாரணை மாற்றப்பட்ட கொலை வழக்கு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தந்தை, மகன் கொலை வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது
இதையடுத்து சிபிஐ விசாரணையின் போது ,இந்த கொலை வழக்குப் பதிவு செய்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணை நிலுவையில் உள்ள வழக்கு
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நிலையிலே இருந்து வரும் நிலையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.
5 ஆண்டுகளுக்கு விசாரணைக்கு பின்பான தீர்ப்பு
5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த இரட்டை கொலை வழக்கானது இன்று மதுரை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை அமர்விற்கு வந்து நிலையில் குற்றவாளிகள் என நீதிபதி அமர்வு தீர்ப்பு விலகி தண்டனை தேதி வருகிற 9 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது
தண்டனை விவரம் அறிவிப்பு
மரண தண்டனை விதிப்பதே சிறந்தது என்றும் , குற்றத்தை புரிந்தவர்கள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள் ,படித்தவர்கள் எனவே இது சாதாரண குற்றமாக கருத முடியாது நீதிபதி கருது தெரிவித்துள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.