Seat sharing in ADMK-BJP alliance will decided soon, agreement is likely to signed on 20th google
தமிழ்நாடு

சென்னை வருகிறார் பியூஷ் கோயல் : ADMK - BJP தொகுதிப் பங்கீடு இறுதியாகிறது : 30 தொகுதிகள், 20ம் தேதி ஒப்பந்தம்!

ADMK BJP Seat Sharing 2026 : அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு, விரைவில் முடிவு செய்யப்பட்டு, 20ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.

Kannan

அதிமுக கூட்டணி

ADMK BJP Seat Sharing 2026 : அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா மற்றும் சிறிய கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. விஜயின் தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பாஜக முயற்சி - கைநழுவிய தவெக

துணை முதல்வர், 2.5 ஆண்டுகள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என பாஜக அளித்த அனைத்து ஆஃபர்களையும் விஜய் ஏற்கவில்லை.

எனவே, தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுவது உறுதியாகி விட்டது. இதன் காரணமாக தமிழகம் நான்குமுனை போட்டியோடு 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.

தேர்தலுக்கு ஆயத்தமான அதிமுக

விஜய் வருகையை எதிர்பார்த்து என்டிஏ கூட்டணி காத்திருந்ததால் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.

தற்போது பாதை தெளிவாகி விட்டதால், ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீட்டை முடித்து தேர்தலுக்கு ஆயத்தமாக அதிமுக முடிவு எடுத்து இருக்கிறது.

இறுதியாகும் தொகுதிப் பங்கீடு

இதற்காக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை (மார்ச் 19) சென்னை வருகிறார்.

அதற்கு முன்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

20ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்து?

பியூஸ் கோயல் - எடப்பாடி நடத்தும் பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டும். அதைத்தொடர்ந்து 20ம் தேதி ( நாளை மறுநாள் ) ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதால் இந்த வாரத்தில் அதிமு கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவுக்கு 30 தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் பாஜக குறைந்தது 30 தொகுதிகளை பெறும் என்றும் சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளைப் பெற முனைப்பு காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

பாமகவிற்கு 20 தொகுதிகள் வரை தந்து விட்டது, சுமார் 170 இடங்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

================