வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை கோவளம், தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்-வில் நடைபெற்ற 2-வது வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2026 நடைபெற்றது.
78 புதிய ஒப்பந்தங்கள்
இம்மாநாட்டில் உற்பத்தி, பசுமை எரிசக்தி, பொறியியல், ஜவுளி மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
200 நாட்களில் வரலாற்றுச் சாதனை
தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த மே 2026 முதல் இதுவரையிலான 200 நாட்களில், தமிழகத் தொழில் துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது 'வெற்றி' மாநாடுகளையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1.73 லட்சம் கோடி முதலீடுகளும், 1.98 லட்சம் வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செயலாக்கத்திற்கு உத்தரவு
வெறும் ஒப்பந்தங்கள் மட்டுமல்ல; உடனடிச் செயலாக்கம்முதலீட்டு மாநாடுகள் வெறும் காகித அளவிலான ஒப்பந்தங்களாக நின்றுவிடாமல், அவை உடனடியாகத் தொழிற்சாலைகளாக உருவெடுப்பதே உண்மையான வளர்ச்சியாகும்.
83 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன
இதனை மெய்ப்பிக்கும் வகையில், முன்னதாக கையெழுத்தான 112 ஒப்பந்தங்களில் 83 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்து, 74.1% செயலாக்க விகிதத்தை தமிழகம் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடிக்கல் நாட்டுதல் மற்றும் திட்டங்கள் தொடக்கம்
இம்மாநாட்டின் ஒரு பகுதியாகப் பின்வரும் முக்கியப் பணிகளையும் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்:
4,476 கோடி முதலீட்டில் 5,074 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
2,676 கோடி முதலீட்டில் உருவாகி, 1,550 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
சிப்காட் , டிட்கோ மற்றும் டி.என்.பி.எல் ஆகிய நிறுவனங்கள் மூலம் 777.74 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட 15 உள்கட்டமைப்புப் பணிகள் திறந்து வைக்கப்பட்டன.
9 முன்னணி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் நேரில் வழங்கி வாழ்த்தினார்.
டாப் 5 பெரிய முதலீடுகள்
CSE Development India Pvt Ltd - RE துறை: ரூ.8,140 கோடி முதலீடு, 2,000 வேலை - விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், வேலூர், கரூர், தேனி என பல மாவட்டங்கள்
JM Baxi Ports & Logistics Pvt Ltd - Logistics: ரூ.5,200 கோடி முதலீடு, 7,500 வேலை - பல மாவட்டங்கள்
Avigna Private Limited - Industrial Park:்ரூ.5,000 கோடி முதலீடு, 300 வேலை - கிருஷ்ணகிரி / செங்கல்பட்டு / சென்னை
Greenbase Industrial & Logistics Park:ரூ.2,650 கோடி முதலீடு, 200 வேலை - செங்கல்பட்டு
Sanmar Group - Shipbuilding: ரூ.1,950 கோடி முதலீடு, 950 வேலை - தூத்துக்குடி
தொழில்துறையினர் நம்பிக்கை
தெற்காசியாவின் முதன்மையான முதலீட்டு மையமாகத் தமிழ்நாட்டை மாற்றும் நோக்கில் நடத்தப்பட்ட ' வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு 2.0 ', மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று தொழில்துறையினர் கூறுகின்றனர்.
இத்தகைய தொடர் முதலீடுகள் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் பரவலான வளர்ச்சியைப் பெறுவதுடன், படித்த இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே தரமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
====================