ஆடு, மாடுகள் மாநாடு :
NTK Seeman at Aadu Maadu Maanadu : மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆடு, மாடுகள் மாநாட்டில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். மேடையின் முன்பு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நாட்டின மாடுகள் மற்றும் ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் எருமை மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள், செம்மறி கடாக்களும் நிறுத்தி வைக்கட்டன.
ஆடு, மாடுகளுக்கு தடையா? என்ன கொடுமை :
மாநாட்டில் உரை நிகழ்த்திய சீமான்(Seeman Speech), “ ஆடு மாடுகளின் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் நான் பேசுகிறேன். காட்டுக்குள் ஆடுமாடு நுழையக்கூடாது, மேய்ப்பர்கள் கால்வைக்க கூடாது என்றால் அதைவிட கொடுமை ஏதாவது இருக்க முடியுமா? எனவேதான், மேய்ச்சல் நிலம் உரிமை என்ற முழக்கத்தோடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
பொருளாதாரம் தெரியாத ஆட்சியாளர்கள் :
ரத்தத்தை உறுக்கி உங்களுக்கு பாலாக தருகிறோம், எங்கள் மூலம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 78 கோடி வருமானமாக கிடைக்கிறது. ஆனால், 50 ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்கிறார்கள். பொருளாதாரம் எங்கு உள்ளது என தெரியாத மூடர்களாக ஆட்சியாளர்கள் உள்ளனர். இங்கு ஆவின் பால்(Aavin Milk) அரசு விற்கிறது, ஆனால் எங்களுக்கு சாப்பிட வைக்கோல் இல்லை.
1.2 லட்சம் மேய்ச்சல் நிலங்கள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், அவற்றை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள், வானூர்தி நிலையங்கள் அமைக்கிறீர்கள். எங்களிடம் இருந்து பால், தயிர், வெண்ணைய் உங்களுக்கு கிடைக்கிறது. எங்களுக்கு சாப்பிட போஸ்டரும், நெகிழியுமே. மேகமலை மலையடிவாரங்களில் காப்புகடுகள் வனவிலங்குகள் சரணாலயம், புலிகள் காப்பாகம் ஆடுமாடு மேய தடை என கூறி காடுகளை பறித்து கொண்டார்கள்.
மலையில் மேய்வதில் என்ன பிரச்சினை? :
சமவெளியில் மேய எங்கு இடம் உள்ளது. மலையில் சென்று நாங்கள் மேய்வதில் என்ன பிரச்சினை, வன விலங்குகளுக்கு நோய் பரப்புவோம் என்கிறார்கள், நாங்கள் எந்த நோயை பரப்பினோம், ஆற்றையும் அருவியையும் நீங்கள் பாதுகாக்கிறீர்களா? உங்களுடைய உணவுச் சங்கிலியை எப்படி மறந்தீர்கள்? புலி, சிங்கம், யானைக்கு மட்டுமே காடுகள் சொந்தமா எங்களுக்கு சொந்தம் இல்லையா?
உழவை போற்றினால் மட்டுமே உயர்வு :
படிக்காத எங்களுக்கு உள்ள அறிவு கூட உங்களுக்கு இல்லையா? பசுமைப்புரட்சி, வெண்மை புரட்சி என பேசுகிறீர்கள் நாங்கள் இல்லாமல் புரட்சி ஏது? உழவர்குடி எங்கு போற்றப்படுகிறதோ உழவன் போற்றப்படும் நாடு தான் நல்ல நாடு. தற்சார்பு பொருளாதரத்திலே முழுமையான பங்கு வேளாண்மை சார்ந்த கால்நடை வளர்த்தல் தான் “, இவ்வாறு சீமான்(Seeman) பேசினார்.
=====