Sengottaiyan Meets TVK Leader Vijay to Joining Tamilaga Vettri Kazhagam Party Tomorrow November 27 Latest News in Tamil Google
தமிழ்நாடு

Sengottaiyan: தவெகவில் செங்கோட்டையன் உறுதியா- விஜயுடன் சந்திப்பு ?

Sengottaiyan Join TVK: அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைய உள்ளார் என்ற கிசுகிசுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு விஜயை சந்திக்க நேரில் சென்றுள்ளார்.

Baala Murugan

தவெகவில் செங்கோட்டையன்

Sengottaiyan Meet Vijay to Join TVK : அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பலரும் கிசுகிசுத்து வந்தனர்.

இந்நிலையில்,கே.ஏ.செங்கோட்டையன் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, 27-ந் தேதி (நாளை) தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிசுகிசுக்கும் அரசியல் வட்டாரங்கள்

இந்த தகவலை அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று தகவல் வெளிவரும் நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பர் 15-ந் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். அதன்பிறகு, அவர் புதிய கட்சி தொடங்குவாரா? அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா? என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேகர்பாபு பேச்சு

இந்த சூழலில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தலைமைச் செயலகம் வந்த செங்கோட்டையனை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார். இதற்கு சில அரசியல் கிசுகிசுப்புகள் வட்டமடித்து வந்த நிலையில் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் சுற்றி வருகிறது.

செங்கோட்டையன் ராஜினாமா

இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகம் சென்ற செங்கோட்டையன் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் அவர் வழங்கினார். இந்நிலையில், இவரின் அடுத்த நகர்வு தவெகவா, திமுகவா என்ற குழுப்பம் நிலவிவந்த நிலையில், தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நாளை அல்லது இனிதான் அவரது முடிவு தெரியவறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜினாமா செய்த இன்றே அவர் விஜய் பார்க்க நேரில் சென்றுள்ளார். பின்னர் தவெக தலைவர் விஜயை சந்தித்து 2 மணி நேர ஆலோசனைக்கு பிறகு செங்கோட்டையன் வெளியேறியுள்ளார்.

முதல் தேர்தலில் இருந்து தொடர்ந்து கோபி தொகுதியில் செங்கோட்டையன் வெற்றி பெற்று வரும் நிலையில், அவர் தவெகவில் இணைந்தார் என்றால் ஒரு தொகுதி தேர்தலுக்கு முன்னரே வெற்றி உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனலாம். எனவே எம்ஜிஆரின் முதல் தேர்தலில் இருந்தே செங்கோட்டையன் 50 ஆண்டு அரசியல் களத்தில் இருந்து வருவதால் செங்கோட்டையன் தவெகவில் இணைவது 90 சதவிகிதம் உறுதியாகியுள்ளது. ஆனால் செங்கோட்டையன் தவெகவில் இணையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதர கட்சிகளும் உற்றுநோக்கும் நிலையில், இவரது ஆதரவாளர்களும் இவருடன் சேர்ந்த தவெகவிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.