Senior leader of the Communist Party of India R. Nallakannu passed away today (February 25)  Source : google
தமிழ்நாடு

யார் இந்த தோழர் நல்லகண்ணு! : 80 ஆண்டு அரசியல், எளிமையான பயணம் : நூற்றாண்டு கூறும் வரலாறு

CPI Nallakannu Passed Away : தொடர்ந்து மக்களுக்காக ,மக்களின் பிரச்னைகளுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து குரல் கொடுத்தவர் தோழர் நல்லகண்ணு அவரின் நூற்றாண்டு கால சிறப்பியல்புகள் குறித்து காண்போம்.

Rohini

அரசியல் வாழ்கை

CPI Nallakannu Passed Away : 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இறுதி வரை ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.

16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்ற அவரை அனுமதிக்கவில்லை என்றாலும் கூட தன்னுடைய '18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.

பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக இருந்த நல்லகண்ணு அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்.

போரட்டகளத்தில் நல்லகண்ணு

நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்த காலகட்டத்தில்

1948ஆம் ஆண்டில் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது.

நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு

இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர்.

ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்காமல் தன் போராட்ட வாழ்வை உயர்த்தி பிடித்திருந்தார் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு நினைவுபடுத்துகிறது.

அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எளிமையின் அடையாளம்

ஒருமுறை சென்னை பெருவெள்ள மழையின் போது சி.ஐ.டி காலனியில் நல்லகண்ணு வசித்த வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தபோது அவரைக் காப்பாற்ற படகு ஒன்று வந்துள்ளது.

"மற்றவர்களையும் காப்பாற்றிவிட்டு என் மீட்க வாருங்கள் என்று அவர் கூறியது இன்றளவும் நினைவு இருக்கிறது.

பெருமைமிகு தகைசால் போராளி

தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே வழங்கி அனைவரையும் பெருமிதத்தில் ஆழ்த்தினார் .