பண்ருட்டி ராமச்சந்திரன்
Senior political leader Panruti Ramachandran, launched new party 'MGR Anna Dravida Munnetra Kazhagam' : எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகியோருடன் பயணித்தவர் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். ஓ. பன்னீர்செல்வத்தின் தொண்டர்கள் மீட்பு இயக்கத்தில் முக்கிய ஆலோசகராக இருந்தவர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி இருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். க
எம்ஜிஆர் அதிமுக
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “அரசியல் என்பது மக்களுக்கானது. தனி ஒருவருக்கானது அல்ல. எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குகிறேன். இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக காஞ்சிபுரம் முத்தையால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் அறிமுகக் கூட்டம் வரும் 23 -ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியில்லை
எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடாது. ஒத்த கருத்துடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம். கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் பாதை தனிப்பாதை.
ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்தது
ஓ. பன்னீர்செல்வம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஓபிஎஸ் உடனான அத்தியாயம் முடிந்தது. நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. ஓபிஎஸ்-க்காக நாம் உயிரை துறக்க முடியுமா?
முடிவு எடுக்கவே தெரியாதவர்
வாழ்நாளை வீணாக்க முடியுமா? வாழ்நாள் போனால் வருமா? அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க” என பதிலளித்தார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் யார்?
88 வயதாகும் பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர். எம்ஜிஆர், கருணாநிதி அமைச்சரவையில் பதவி வகித்தவர்.
பாமகவில் சேர்ந்தார்
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பாமகவில் சேர்ந்த அவர், அக்கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
தேமுதிகவில் பண்ருட்டி ராமச்சந்திரன்
தேமுதிக என்ற பெயரில் விஜயகாந்த் தனிக்கட்சி தொடங்கியதும் அங்கு சென்று சேர்ந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்
பின்னர் மீண்டும் அதிமுகவில் வந்து சேர்ந்து கொண்டார் பண்ருட்டியார். அதிமுக பிளவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அவரது தொண்டர்கள் மீட்பு இயக்கத்திற்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.
1967ம் ஆண்டு எம்ஜிஆரால் முதன்முறையாக எம்எல்ஏ ஆன பண்ருட்டி ராமச்சந்திரன், இலங்கை பிரச்னை தொடர்பாக பேச ஐநா சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஒத்த கருத்து இருந்தால் ஆதரவு
இந்தநிலையில், 88 வயதில் எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி இருக்கும் அவர், தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தெரிவித்தாலும், யாருக்கு ஆதரவு என்ற முடிவை விரைவில் அறிவிப்பார் எனத் தெரிகிறது.
=====================