https://x.com/V_Senthilbalaj
தமிழ்நாடு

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு: செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ்

மின்மாற்றிகள் கொள்முதல் டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

MTM

சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக மின்வாரியத்துக்கு கடந்த 2021-23 காலகட்டத்தில் 45,800 மின்மாற்றிகளை கொள்முதல் செய்ய ரூ.1,183 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் நடந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.397 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்க போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணையின்போது , ‘இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் தரப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளி்க்கும் வகையில் அவருக்கு நோட்டீஸ் பிறப்பி்த்த நீதிபதி, விசாரணையைஅடுத்த் மாதம் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.