Senthil Balaji's transformer purchase case transferred to CBI  google
தமிழ்நாடு

ரூ. 397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் வழக்கு : சிபிஐக்கு மாற்றிய நீதிமன்றம் : செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Rohini

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் புகார் பின்னணி

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், அதிமுக வழக்குரைஞர் அணி துணைச் செயலர் இ.சரவணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை,

தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் சுமார் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறி மனுதாக்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கை விசாரிக்க கோரிக்கை

இதில் அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசு மற்றும் மனுதாரர்கள் தரப்பில் இறுதிக்கட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

விசாரணையில் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

இந்த வழக்கந்து விசாரணைக்கு வந்த போது , ஊழல் தடுப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மின்மாற்றிகள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால், அந்த புகார்களை முடித்து வைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு சிபிஐக்கு மாற்றம்

இந்த நிலையில், வழக்காத்து இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐக்கு மாற்றி உத்தரவு

இது குறித்து தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் , இரு வாரங்களைல் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிட்டது

சம்மந்தப்பட்ட துறைகளை ஒத்துழைக்க வேண்டும்

அதேபோல், சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு, டான்ஜெட்கோ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

=============