Seven-member committee to study El Niño impacts: 'Tamil Nadu Weatherman' appointed!
எல் நினோ ஆபத்து: தமிழக அரசு நடவடிக்கை
எல் நினோ பருவநிலை மாற்ற பாதிப்புகளைக் கண்காணிக்கத் தமிழக அரசு 7 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
தமிழக அரசு சார்பில் புதிய வல்லுநர் குழு
பசிபிக் பெருங்கடலில் உருவெடுத்துள்ள 'எல் நினோ' (El Niño) பருவநிலை மாற்றத்தின் காரணமாகத் தமிழகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராய 7 உறுப்பினர்கள் கொண்ட புதிய வல்லுநர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.
குழுவின் தலைவர் மற்றும் செயல்பாடுகள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் இக்குழுவின் தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பக் கண்காணிப்பு
எல் நினோ விளைவுகளை அறிவியல் மற்றும் நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் துல்லியமாகக் கண்காணித்து, அதுகுறித்த முக்கியத் தகவல்களைப் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு இக்குழு முன்கூட்டியே உடனுக்குடன் அனுப்பும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மாநிலத்தின் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரங்களை இக்குழு தொடர்ந்து கண்காணிக்கும். வெள்ளத்தடுப்பு மற்றும் வறட்சி மேலாண்மைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்கத் தமிழக அரசுக்கு இக்குழு பெரிதும் வழிகாட்டும்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சேர்க்கை
பொதுமக்களுக்குக் காலநிலை மற்றும் வானிலை குறித்த தகவல்களை எளிமையான முறையில் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பிரபலத் தமிழ்நாட்டின் தனியார் வானிலை ஆய்வாளர்,தமிழ்நாடு வெதர்மேன் என மக்களால் அழைப்படும் பிரதீப் ஜான் இக்குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: Ajinkya Rahane : கிரிக்கெட்டுக்கு ’குட்பை' சொன்னார் ரஹானே : சரியான நேரம், முடிவை மதிக்க வேண்டும், உருக்கமான பதிவு..!
======