Silver prices are at an all-time high of Rs 207 per gram and Rs 2 lakh 7 thousand per kilo  
தமிழ்நாடு

Silver:வரலாறு காணாத உச்சம் தொட்ட வெள்ளி: கிலோ 2 லட்சத்தை தாண்டியது

வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத அளவு ஒரு கிராம் 207 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Kannan

தங்கம் விலை அதிகரிப்பு

Silver Rate Record High, Gram Rs 207, Kg Rs.2,07,000, Gold rate also increased : சர்வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது.

அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது.

சவரன் ரூ.96,240

அந்த வகையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,030க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. அதன்படி இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு, தங்கத்திற்கு போட்டியாக உருவெடுத்து இருக்கிறது.

டிசம்பர் 1 முதல் இன்று வரை தங்கம் விலை நிலவரம்

10.12.2025- ரூ.96,240

09.12.2025- ரூ.96,000

08.12.2025- ரூ.96,320

07.12.2025- ரூ.96,320

06.12.2025- ரூ.96,320

05.12.2025- ரூ.96,000

04.12.2025- ரூ.96,160

03.12.2025- ரூ.96,480

02.12.2025- ரூ.96,320

01.12.2025- ரூ.96,560

கடந்த 10 நாட்களாக தங்கம் விலை பவுனுக்கு அதிகபட்சமாக டிச.1 அன்று ரூ.96,560-க்கும், குறைந்தபட்சமாக டிச.5 மற்றும் 9 தேதிகளில் ரூ.96,000-க்கும் விற்பனையாகி இருக்கிறது.

தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் பவுன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.96 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டும் தங்கம் விலையேற்றம் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்து இருப்பதால், சவரன் ஒரு லட்சத்தை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது தெரிகிறது.

=====