மகளிருக்கான சிங்கப்பெண் மேம்பாட்டு திட்டம்
சிங்கப்பெண் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு சுய உதவி குழுக்கள் மூலம் கடன் வழங்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் விஜய்
தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்ற நிலையில் , அதில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளதாகவும் இது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது
மகளிர் மேம்பாட்டு திட்டம் , ரூ 7000 கோடி கடன் வாங்க திட்டம்
இந்த மகளிர் மேம்பாட்டு திட்டத்திற்காக ,நடப்பு ஆண்டில் மட்டும் சுய உதவி குழுக்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதன்படி கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகை கடன், சுய உதவி குழு கடன், சிறு வணிக கடன் உள்ளிட்ட பல வகையான கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது
பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
இந்த சிங்கப்பெண் மகளிர் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் மகளிர் சுய உதவி குழுக்கம் மூலமாக கடன் வழங்கும் திட்டம் குறித்து, தவெகவில் முதல் பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .
========================
-