SIR 2026 Tamilnadu Online Registration Here is How To Apply Online Step By Step Guidance in Tamil Google
தமிழ்நாடு

Online "SIR" : வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது? : வாங்க பார்க்கலாம்

SIR 2026 in Tamilnadu Online Registration : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தத்தை வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Kannan

வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

SIR 2026 in Tamilnadu : Online Registration : இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) 2026க்காக, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்:

  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை போர்ட்டலான http://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

    ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால், உங்களது கைபேசி எண், மின்னஞ்சல்/EPIC எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்யவும்.

  • புதிய பயனராக இருந்தால், உடனடியாகப் பதிவு (Sign-Up) செய்துவிட்டு உள்ளே நுழையவும்.

  • முகப்புப் பக்கத்தில் உள்ள 'Special Intensive Revision (SIR) - 2026' என்பதைக் கிளிக் செய்யவும்.

  • அதன் கீழ் உள்ள 'Fill Enumeration Form' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  • உங்களுடைய மாநிலத்தைத் தேர்வு செய்யவும். உங்களுடைய தற்போதைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC No.) உள்ளிட்டு, விவரங்களைத் தேடிக் கண்டறியவும்.

  • உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டு சரிபார்க்கவும்.

  • ஓ.டி.பி. சரிபார்ப்புக்குப் பிறகு, உங்களது தகவல்கள் பாதியளவு நிரப்பப்பட்ட Enumeration Form ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். இந்தத் தகவல்களை முழுமையாகச் சரிபார்க்கவும்.

  • வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பது, குடும்ப உறுப்பினர்களின் பெயரை ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்படும் ஒரு முக்கியமான பகுதி இதுவாகும். இதற்காக, படிவத்தில் கீழே வரும் 3 விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.

  • (1) முன்னர் செய்த மாற்றத்தில் இடம்பெற்றிருந்த உங்களது பெயர் நினைவிருந்தால் அதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

(2) அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பெயர் நினைவிருந்தால், அதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

(3) யாருடைய பெயரும் நினைவில்லை என்றால், அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இந்தச் செயல்பாட்டிற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை. ஆதார் எண்ணிலுள்ள பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

  • உங்களுக்கு அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பெயர் நினைவிருந்தால், அவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணோ, பெயரோ, தொகுதியோ ஏதாவது ஒன்று தேவை.

  • படிவத்தில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தித் தேடிக் கண்டறிந்து பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றைக் கவனமாக உள்ளிட வேண்டும்.

  • உறவினரின் தகவலை உறுதி செய்த பின், கேட்கும் மற்ற தகவல்களை உள்ளிட்டு, படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

  • சமர்ப்பித்த பின், உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள ஒப்புதல் எண் (Acknowledgement Number) ஒன்று வழங்கப்படும். இதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  • படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், இணையதளத்தில் உள்ள "Book a call with BLO" என்ற வாய்ப்பைப் பயன்படுத்தியோ அல்லது 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ உங்களுடைய வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (BLO) உதவி கேட்கலாம்.

  • நீங்கள் கொடுத்த தகவலைச் சரிபார்க்க, BLO உங்களை அழைக்கலாம் அல்லது உங்கள் இல்லத்திற்கே வரலாம். அப்போது உங்கள் விவரங்களைப் பார்க்க வேண்டும்.

  • படிவத்தைப் பூர்த்தி செய்ய EPIC எண், ஆதார் எண், மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் EPIC எண் ஆகியவை கட்டாயம் தேவை.

  • இவற்றை சரியாக பயன்படுத்தினால், வீட்டில் இருந்தபடியே எஸ்ஐஆர் படிவத்தை எளிதாக பூர்த்து செய்து விடலாம்.

==================