எஸ்.ஐ.ஆர் பணியின் கட்டாயம்
SIR Draft Voter List 2026 in Tamil Nadu : SIR என்பது ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் ஒரு வழக்கமான, சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட செயல்முறை ஆகும். அதாவது . SIR நிலையான, வெளிப்படையான, சட்ட நடைமுறையுடன் தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் செய்யும் வழக்கமான வழிமுறையே. அதன் முக்கியப்பணி இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல், சரியான நகல்களை இணைப்பது, முகவரி மாற்றங்களை சரி செய்வது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது என்பது தான்.
இதனுடன் போலி உள்ளீடுகளை அடையாளம் காண்பது, சுத்தமான, துல்லியமான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதும் தான். உலகில் உள்ள ஒவ்வொரு ஜனநாயகமும் வாக்காளர் பட்டியலை அவ்வப்போது சுத்தம் செய்வதை உறுதி செய்கிறது. எனவே, முன்நாட்களில் இருந்து வாக்காளர் சீர்திருத்தம் கடைபிடிக்கப்படுகிறது. எஸ்.ஐ. ஆர் பணிகள் தற்போது வருகிற காலகட்டங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மீண்டும் எஸ்.ஐ. ஆர் பணி நடைபெற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி தேர்தலை சந்திக்கும் மாநிலங்களுடன் எஸ்.ஐ.ஆர் நடைபெறும் மாநிலங்களையும் அறிவித்தது.
SIR- ன் முக்கியத்துவம்
எஸ்ஐஆர்-ன் உண்மை நிலை, மொத்தமாகப் பதிவுசெய்யப்பட்ட போலி வாக்காளர்கள், ஒரே குடும்பத்துடன் இணைக்கப்பட்ட பல உள்ளீடுகள், தொகுதியில் இனி வசிக்காத மாற்றப்பட்ட வாக்காளர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து "வாக்களிக்கும்" இறந்த வாக்காளர்கள் அதாவது அவர்கள் பெயரில் பல போலி வாக்காளர்கள் என வாக்கு உரிமையே சீர் குலைந்து இருந்தது. இதனை சரிசெய்வதன் பொருட்டாகவே தற்போது மீண்டும் எஸ்.ஐ. ஆர் முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது, அதுவே அதன் தலையாய கடமையாகும்.
எஸ்.ஐ. ஆர் ஜனநாயகத்தின் அடித்தளம்
ஜனநாயகத்தை பாதுகாப்பது, வலுப்படுத்துவது என்றால், 100% சரிபார்க்கப்பட்ட வாக்காளர்கள், சுத்தமான வாக்காளர் பட்டியல், பூஜ்ஜியம் சதவீதம் போலி உள்ளீடுகள் என தொடர்ந்து புதிய வாக்காளர்களை எளிதாக சேர்ப்பது, நேர்மையான, அமைதியான தேர்தல் என இதுவே எஸ்.ஐ.ஆர்- ன் முக்கியமான அளப்பரிய பணியாகும், வெளிப்படையான வாக்காளர் பட்டியல் கிடைப்பதற்கான வழிமுறை. எனவே, எஸ்.ஐ.ஆர் என்பது ஜனநாயகத்தின் எதிரியல்ல, ஜனநாயகத்தின் அடித்தளம்.
தமிழகத்தில் SIR-ஐ சில கட்சிகள் எதிர்த்தனர்
SIR முக்கியத்துவம் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்ட பிறகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் SIR முறையை தமிழகத்தில் கைவிடும்படி தங்களின் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் முன்வைத்து வந்தனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் தேர்தல் ஆணையம் SIR முறையை உறுதிப்படுத்தி SIR பணியைதொடங்கி, சட்டவிரோத உள்ளீடுகள் அகற்றப்படுவதையும் உறுதி செய்தது.
SIR பணி தீவிரம்
இதைத்தொடர்ந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் எஸ்.ஐ.ஆர் பணி ஆரம்பமாகி, தீவிரமடைந்தது. இதன் தாக்கமாக பிஎல்ஓக்கள் சிலரும் தற்கொலை என்ற செய்திகள் வெளிவந்தாலும், தேர்தல் ஆணையத்தின் நிபந்தணைப்படி எஸ்.ஐ.ஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதன்பிறகு, எஸ். ஐ. ஆர் பணிகள் காலஅவகாசம் கேட்கப்பட்டு தற்போது டிசம்பர் 19 ஆம் தேதி கூறியதைப்போல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மாவட்ட வாரியாக தற்போது வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டு, நீக்கியவர்கள் குறித்த கணக்கீடுகளும் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை சேலத்தில் வெளிவந்த வரைவு வாக்காளர் பட்டியல் கணக்கீடு
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது. இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக SIR பணி மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்கள்
1. சென்னை- 14,25,018 வாக்காளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர். அதாவது, SIRக்கு முன்- 40,04,649 என தெரிவித்துள்ளனர். அதில் தற்போது சென்னை வாக்காளர்கள் பட்டியலில் SIR பணிக்கு பின் இருப்பாக 25,79, 631 என்று கணக்கீடுகள் வெளிவந்துள்ளது.
2. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் 3,24,894 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 3.20 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு 16,09,553 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
S.I.R-க்கு முன் - 19,34,447
S.I.R-க்குப் பின் - 16,09,553
நீக்கப்பட்டவர்கள் - 3,24,894
3. திருவள்ளூர்: எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 6,19,777 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 35,82,226 வாக்காளர்களில் 6,19,777 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
S.I.R-க்கு முன் - 35,82,226
S.I.R-க்குப் பின் - 29,62,449
நீக்கப்பட்டவர்கள் - 6,19,777
4. நெல்லை: எஸ்.ஐ.ஆர் பணிகள் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் 2,15,475 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். நெல்லையில் மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை 12,03,224-ல் 15.16 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
S.I.R-க்கு முன் - 14,18,325
S.I.R-க்குப் பின் - 12,02,865
நீக்கப்பட்டவர்கள் - 2,15,460
5. தருமபுரி மாவட்டத்தில் 81,515 பேர் நீக்கம்
5 தொகுதிகளில் 6.34% பேர் நீக்கம்
S.I.R-க்கு முன்- 12,85,432
S.I.R-க்குப் பின் - 12,03,917
நீக்கப்பட்டவர்கள் - 81,515
6. திருச்சி மாவட்டத்தில் 3.31 பேர் நீக்கம்
14.01% வாக்காளர்கள் நீக்கம்
S.I.R-க்கு முன் - 23,68,967
S.I.R-க்குப் பின் - 20,37,180
நீக்கப்பட்டவர்கள் -3,31,787
7. மதுரை மாவட்டத்தில் 3.8 லட்சம் பேர் நீக்கம்
10 தொகுதிகளைக் கொண்டது மதுரை
S.I.R-க்கு முன் - 27,40,631
S.I.R-க்குப் பின் - 12,01319
நீக்கப்பட்டவர்கள் - 3,80,474
8.கடலூர் மாவட்டத்தில் 2.46 லட்சம் பேர் நீக்கம்
11.25% வாக்காளர்கள் நீக்கம்
S.I.R-க்கு முன் - 21,93,577
S.I.R-க்குப் பின் - 19,46,759
நீக்கப்பட்டவர்கள் -2,46,818
9. வேலூர் மாவட்டத்தில் 2.15 லட்சம் பேர் நீக்கம்
16.50% வாக்காளர்கள் நீக்கம்
S.I.R-க்கு முன் - 13,03,030
S.I.R-க்குப் பின் - 10,88,005
நீக்கப்பட்டவர்கள் - 2,15,025
10. புதுக்கோட்டை மாவட்டம் 1.39 லட்சம் பேர் நீக்கம்
6 தொகுதிகளைக் கொண்டது புதுக்கோட்டை
S.I.R-க்கு முன் - 13,94,112
S.I.R-க்குப் பின் - 12,54,525
நீக்கப்பட்டவர்கள் - 1,39,587 என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களின் பட்டியல் இன்றைக்குள் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.