SIT Approaches Public in Gem Veeramani Case, Launches WhatsApp Helpline Google
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு: தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிவிப்பு ...

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை பெற சிறப்பு விசாரணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது...

NARENDRAN K

விசாரணை தீவிரம் :

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே ஜெம் வீரமணி மற்றும் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தகவல் தெரிவிக்க பிரத்யேக ஏற்பாடு :

வழக்கு தொடர்பாக இதுவரை வெளிவராத தகவல்கள், ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது பிற ஆதாரங்கள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் பகிர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேக வாட்ஸ் அப் எண் மற்றும் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கூடுதல் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்க விசாரணை அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

புதிய தகவல்களை தேடும் SIT :

இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை அடையாளம் காணும் பணியிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும், வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆதாரங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு :

ஜெம் வீரமணி வழக்கு அரசியல் அரங்கிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் விசாரணை மற்றும் முந்தைய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இதனால் இந்த விவகாரம் சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு :

இந்த வழக்கில் எந்தவித தாமதமோ அல்லது மறைப்போ நடந்திருந்தால் அதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேத்தியேகமாக நம்பர் அறிவிப்பு :

இவ்வழக்குகள் தொடர்பாகப் புகார்கள் அல்லது ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்களைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் (9345319676) என்ற எண்ணில் நேரடியாகவோ, வாட்ஸ்அப் WhatsApp மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

====================