தேர்தல் களம் - தமிழகத்தில் புயல்
TVK Vijay Survey in Tamil Nadu : தமிழக தேர்தல் களம் இதுவரை கண்டிராத புதிய திருப்பத்தை நோக்கி செல்லத் தொடங்கி விட்டது. நான்கு முனைப்போட்டி எனக் கூறப்பட்டாலும், விஜயின் வருகை, திராவிட கட்சிகளின் வாக்கு கோட்டையில் ஓட்டையை போடத் தொடங்கி விட்டது.
கணக்குகளை மாற்றப்போகும் விஜய்
அரசியல் பயணத்தை தொடங்கியது முதல் திராவிட மற்றும் தேசிய கட்சிகளின் கணக்குகளை தலைகீழாக மாற்றி வருகிறார் விஜய். குறிப்பாக, சமீபத்தில் வெளியான சில ரகசிய சர்வே முடிவுகள் ஆளுங்கட்சியையும், மத்திய ஆட்சியாளர்களையும் ஒருசேர அதிர வைத்துள்ளது.
விஜயின் 'வாக்கு வங்கி'
மத்திய அரசின் உளவுத்துறை மற்றும் ரகசிய ஏஜென்சிகள் நடத்திய ஆய்வில் ஒருஉண்மை வெளியாகியுள்ளது. வரப்போகும் தேர்தலில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக விஜய் பக்கம் சாயும் என சர்வே முடிவுகள் அதிர வைக்கின்றன.
விசில் போட தயாராகும் பெண்கள்
தமிழகத்தை பொருத்தவரை பெண்கள் வாக்குகளை இதுவரை திராவிட கட்சிகள் வசமே இருந்தது. இலவசங்கள், நலத்திட்டங்கள் அவர்களின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தன. ஆனால் இந்த முறை அனைத்தும் மீறி, 'தளபதி' பக்கம் பெண்கள் பார்வை திரும்பியுள்ளது.
மாற்றி யோசிக்கும் மகளிர்
எவ்வளவு தான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தால், ஒருமுறை மாற்றி யோசிப்போம் என்ற மனநிலையை நோக்கி பெண்கள் நகரத் தொடங்கி விட்டார்கள்.
எம்ஜிஆருக்கு கிடைத்த மாற்றம் போல, இந்த முறை தேர்தல் முடிவுகள் மாறுமோ என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முதல் தலைமுறை வாக்காளர்கள்
முதல்முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களில் 80% ஆதரவு விஜய்க்கே இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சி நடத்திய சர்வேக்களும் இதை உறுதிப்படுத்த, கோட்டை வரை அதிர்ச்சி தெரிகிறது.
கடிவாளம் போட பாஜக வியூகம்
விஜயின் இந்த அசுர வளர்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்ணும், அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய பாஜக அரசும் வியூகம் வகுக்க தொடங்கி விட்டது.
’ஜனநாயகன்’ நெருக்கடி பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது போல விஜய் செயல்படுகிறார்.
அது தனிப்பட்ட பிரச்னை, அரசியல் சார்ந்தது இல்லை என்பதில், விஜய் தெளிவாக இருக்கிறார்.
எனவே, நட்பு ரீதியில் அவரை கட்டுக்குள் கொண்டு வர முடியுமா என்று பாஜக பரிசீலித்து வருகிறது.
நட்பு பாராட்ட திமுக முயற்சி
மறுபுறம், திமுக அரசு விஜயை நேரடியாக எதிர்ப்பதை விட, அவரை அரவணைத்துச் செல்வதே புத்திசாலித்தனம் என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
விஜய்யின் அரசியல் வருகை ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், அவரை ஒரு 'நண்பனாக' அல்லது 'நடுநிலை சக்தியாக' வைத்திருக்க திமுகவின் முக்கிய புள்ளிகள் காய் நகர்த்தி வருகின்றனர்.
இலவசங்கள் கை கொடுக்குமா?
விஜயின் பேச்சுகள், செயல்பாடுகள் தங்கள் வாக்கு வங்கியை அபகரித்து விடக் கூடாது என்று அறிவாலயம் நினைக்கிறது. மகளிர் உரிமைத்தொகையாக வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் தங்கள் வாக்கு வங்கியை உயர்த்தும் என்று திமுக கணக்கு போட்டாலும், தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளதால், அறிவாலய வட்டாரம் குழப்பத்தில் உள்ளது.
வாக்குகளை பிரிக்கும் விஜய்
எனவே, விஜய் கொடுக்கப் போகும் வாக்குறுதிகள் யாரை மனநிலையை வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
அது வெற்றி பெற்றால், திமுக, அதிமுக வாக்குகள் கணிசமாக விஜய் பக்கம் போகும், இது வெற்றி வாய்ப்பை பெரிய அளவில் பாதிக்கும்.
திருப்பம் தருமா வேலூர் கூட்டம்?
தன்னைச் சுற்றி நடக்கும் இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தை நன்குணர்ந்த விஜய், வேலூர் பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெரிகிறது.
பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், மாணவ, மாணவிகளை கவரும் வகையில் கல்வி உதவித்தொகை, போன்றவை குறித்து வாக்குறுதிகளை அவர் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
மாறப்போகும் பாரம்பரிய வாக்குகள்
இவை, இதுவரை அதிமுக, திமுகவுக்கு பாரம்பரியமாக வாக்களித்து வந்தவர்களை மடைமாற்றும்.
முதல் தலைமுறை வாக்காளர்கள் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுப்பதால், திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்து இருக்கின்றன.
=================