Southwest monsoon to begin in Tamil Nadu this weekend: Meteorological Department announcement  google
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இந்த வார இறுதியில் தென்மேற்குப் பருவமழை தொடக்கம் : வானிலை மையம் அறிவிப்பு!

இந்தாண்டு மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலேயே மழை தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

Rohini

தென்மேற்குப் பருவமழை தொடக்கம்

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் இந்த வார இறுதியில் துவங்கக்கூடும் என்றும்,

நேற்று ,வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து

வழுபெறும் காற்றழுத்த வளிமண்டலம்

இன்று (12-5-26) காலை 08.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது, அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெறக்கூடும்.

சுமார் 0.9 கிமீ உயரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையப்பகுதிகளிலிருந்து

து மரத்வாடா வரை வட தமிழகம், ராயலசீமா மற்றும் வடக்கு உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. என்றும் தெரிவித்துள்ளது

கனமழை பெறும் மாவட்டங்கள்

இதன் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள்

மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

இந்த வார இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

தமிழ்நாடில் இந்த வார இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவிதுள்ளது.இதனால் வ்ழக்கத்தை விட த்மிழகம் முன்ன்கூட்டியே ம்ழையை பெறுகிறது.

===========