அதிக நச்சுக்காற்று உள்ள நகரமாக சென்னை இருக்கிறது :
இந்தியாவிலேயே நச்சுக்காற்று அதிகம் உள்ள நகரமாக சென்னை இருக்கிறது சென்னையில் வசிக்கும் மக்களின் வாழ்நாளில் 4 வருடம் குறைந்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன சென்னையில் இருப்பவர்கள் 60 வயதுக்கு பதிலாக 56 வயதிலேயே உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு.
செப்டம்பர் 7 உலக தூய காற்று நாள் :
உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுச்சூழல் சம்பந்தமான கருத்தரங்கங்களில் பங்கேற்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ஐயா அவர்களுக்கும் பாமக தலைவர் அன்புமணிக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து பேச தொடங்குகிறேன்.
இன்று செப்டம்பர் 7 உலக தூய காற்று நாள். நல்ல சுற்றுச்சூழல் என்பது அடிப்படை உரிமை.
நச்சு சூழல் இருக்கக் கூடாது சுத்தமான காற்று சுகாதாரமான குடிநீர் இருக்க வேண்டியது நம்முடைய உரிமை அதை கொடுக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் உரிமை உள்ளாட்சிக்கும் அந்த கடமை இருக்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இண்டூருக்கு முதல் இடம் :
சென்னையில் நல்ல காற்றே இல்லை. இந்தியாவில் இருக்கக்கூடிய நல்ல காற்று இருக்கக்கூடிய நகரம் இந்தூர் கடைசி இடத்தில் சென்னை இருக்கிறது.
அவ்வளவு மோசமான நச்சு கலந்த சுவாசிக்க தகுதி இல்லாத காற்றை சென்னை மக்கள் சுவாசித்து வருகிறார்கள் வருடத்திற்கு 11 ஆயிரம் பேர் சென்னையில் மட்டும் நச்சு காற்றால் உயிரிழந்து வருகிறார்கள்.
நச்சு காற்றின் மூலமாக பொருளாதார இழப்பு அதிக அளவில் நடைபெறுகிறது.
சென்னையில் மற்றும் நச்சு காற்றின் மூலமாக நான்கு ஆண்டு அவர்களது ஆயுசு குறைந்துள்ளது 60 ஆண்டு வாழ வேண்டியவர்கள் 56 ஆண்டிலேயே உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் நீதி வீண் :
மத்திய அரசு கொடுத்த தொகையில் 194 கோடி செலவு செய்யப்படாமல் அப்படியே உள்ளது இது தூய காற்றை உருவாக்குவதற்காக மத்திய அரசு நம்முடைய மாநில அரசுக்கு கொடுத்த நிதி அதை கூட நம்முடைய மாநில அரசு முழுமையாக செலவு செய்யவில்லை.
சென்னையில் காற்று ஏன் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்று சென்னை ஐஐடி ஒரு ஆய்வு செய்து இருக்கிறார்கள் அந்த அறிக்கை கூட இன்னும் வெளியிடப்படவில்லை.
அந்த அறிக்கை வெளியில் வந்தால் தான் காற்று எப்படி யாரால் மாசு உருவாகிறது என்ற உண்மை வெளிவரும்
திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் முதல் மணலி வரை அனல் மின் நிலையத்தால் ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
===============