Speaker announces notices seeking explanation issued to four ministers who resigned.  google
தமிழ்நாடு

”ராஜினாமா செய்த 4 அதிமுக அமைச்சர்கள்” : விளக்கம் கேட்டு நோட்டீஸ் : சபாநாயகர் அறிவிப்பு...

அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில் அதற்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்

Rohini

தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்​ய​பா​மா, பெருந்துறை ஜெயக்​கு​மார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்​பையா ஆகிய 4 எம்​எல்​ஏக்​கள், தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.இது அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரப்பரபை ஏற்ப்படுத்தியது

சபாநாயகரிடம் மனு அளித்த அதிமுகவினர்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 அமைச்சர்களும் , தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உடனடியாக தவெகவில் இணைந்தனர் .

இந்த கட்சித்தாவலுக்கு நடவ்டிக்கை எடுக்க வேண்டும் என கூறி அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது

சபநாயாகர் விளக்கம் கேட்டு நோட்டிஸ்

இந்தச் சூழலில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு 4 பேருக்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சபநாயகர் தெரிவித்துள்ளதாவது

அதிமுக கொறடா யார் என்பது குறித்த மனுக்கள் மீது ஆய்வு நடந்து வருவதாகவும் மேலும் , சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே இதுகுறித்து என்ன பரிசீலனை செய்யப்படும் என்பதை அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

=======================