சட்டமன்ற தேர்தல் - பரபரக்கும் களம்
Speaker Appavu announced TN Assembly Session 2026 Date : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலமே உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என நான்கு போட்டிக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சிகளை அதிமுக, திமுக மேற்கொண்டு வருகின்றன.
சட்டமன்ற கூட்டம்
இந்த பரபரப்பான சூழலில் தமிழக சட்டமன்றம் ஜனவரி 20ம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) கூடுகிறது(Tamil Nadu Assembly Session 2026 Date in Tamil). இதனை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது மரபு.
ஆளுநர் உரையுடன் கூட்டம்
இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ”2026ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தயாரித்து தரும் உரையை ஆளுநர் சட்டப்பேரவையில் வாசிப்பார் என்றும் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்
சபாநாயகரின் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தக் கூட்டத்தொடர் அரசின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் முக்கிய அரங்காக அமையும். எதிர்க்கட்சிகள் அரசின் கொள்கைகளை விமர்சிக்கவும், மக்கள் பிரச்சனைகளை எழுப்பவும் இந்தக் கூட்டத்தொடரை முழுமையாக பயன்படுத்தும்.
ஆளுநர் உரை! எதிர்பார்ப்பு
அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதல்களுக்கு இந்தக் கூட்டம் அரங்கமாக அமையலாம். தமிழக அரசு கொடுக்கும் அறிக்கையை அப்படியே ஆளுநர் படிப்பாரா? அல்லது கடந்த காலத்தை போன்று புறக்கணித்து விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.
பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்?
ஆளுநர் உரைக்கு பிறகு அலுவல் ஆய்வுக்குழ கூடி, சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்று முடிவு செய்யும். பிப்ரவரி மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்யும். ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்பதால், புதிய ஆட்சி அமைந்த பிறகே முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
======================