Speaker J.C.D. Prabhakar announced that Tamil Nadu Legislative Assembly session for three days google
தமிழ்நாடு

"3 நாட்கள் சட்டமன்ற கூட்டம்” : கேள்வி நேரம் இல்லை, நேரடி ஒளிபரப்பு விரைவில் முடிவு : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்...!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாள்கள் நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Kannan

17வது சட்டமன்ற கூட்டத்தொடர்

17வது சட்டமன்றம் இன்று முதன்முறையாக கூடியது. ஆளுநர் அர்லேகர் அவையில் உரை நிகழ்த்தினார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தவெக அரசின் இலக்குகள், திட்டங்கள் தொடர்பான தகவல்களை ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

ஆளுநர் உரைக்கு பிறகு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டது.

3 நாட்கள் கூட்டத்தொடர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், “ சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 19, 22, 23 ஆகிய 3 நாள்கள் நடத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

23ம் தேதி முதல்வர் பதிலுரை

ஜூன் 23ம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளார். இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் தவறில்லை, சுமூகமாக சட்டப்பேரவை நடந்து முடிந்துள்ளது.

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்

நாளை மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். ஆளுநர் உரை மீதான விவாதமும் நாளையே தொடங்கும்.

நேரடி ஒளிபரப்பு - விரைவில் முடிவு

நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.

3 நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெறுவதால், வினா விடை இல்லை .

அதிமுக சட்டமன்றக் குழு தலைவர், கொறடா குறித்த முடிவு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

===================