Special resolution against constituency delimitation: DMK extends support google
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானம் : 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு : முழுமனதுடன் ஆதரவளித்த திமுக..!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

Rohini

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனிதீர்மானம்

சட்டப்பேரவியில் முதல்வர் விஜய் அவர்களால் கொண்டு வரப்பட்ட, தொகுதி மறுவரையறைக்கு எதிரான தமி தீர்மானத்திற்கு , எதிர்கட்சிதலைவரும் , திமுக தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்

தொகுதி மறுவரையறை பாதிப்பு குறித்து முதலில் கூறியது திமுக தான் , உதயநிதி

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனிதீர்மானத்திற்கு , உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது ,தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே தி.மு.க. நிலைப்பாடக இருந்து வருகிறது என்றும் ,

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது தி.மு.க. தான். எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் , தமிழகத்தின் விகிதாச்சாரம் குறையக்கூடாது என இதே சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார் என்று உதயநிதி தெரிவித்தார்

திமுகவின் எதிர்ப்பால் தான் நாடளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தோற்கடிக்கப்பட்டது , உதயநிதி

திமுவின் எதிர்ப்பால் தான் நாடளுமன்றத்தில் கொண்டுவரப்பட இருந்த தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது என்றும் இது குறித்து அப்போதையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் என்று தெரிவித்தார்

2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் , தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும், எதிர்க்கட்சி தலைவர்

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தனி தீர்மானம் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ,2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும்.

என்றும் குறிப்பாக 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனதுடன் திமுக ஆதரிப்பதாகவும், 7.18 விகிதாச்சாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி த.வெ.க. அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது என்று தெரிவித்தார் , இதற்கு முன் ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

=============================