Special Train for Ramadan 2026 run from Chennai Egmore To Kanniyakumari for festival of Ramzan Source : Google
தமிழ்நாடு

ரம்ஜான் பண்டிகை : சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்! : எழும்பூர் - கன்னியாகுமரி இடையே இயக்கம்

Special Train for Ramadan 2026 Chennai Egmore To Kanniyakumari : ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Rohini

சிறப்பு ரயில் இயக்கம்

Special Train for Ramadan 2026 Chennai Egmore To Kanniyakumari : நாளை கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

அதன்படி ரமலான் பணிடிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது ,இதே ரயில் மறுமார்க்கமாக , கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.25 மணியளவில் சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக நின்று செல்லும் ரயில்கள்

இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை,

விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும் என அறிவிக்கப்ட்டுள்ளது.