speech in Thanjavur, Udhayanidhi Stalin was arrested in Chennai, taken to Thanjavur, and released AI generated
தமிழ்நாடு

திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு : சென்னையில் கைது, தஞ்சாவூரில் விசாரணை, விடுவிப்பு” : பரபரப்பான 10 மணிநேரம்...!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் தஞ்சை பேச்சு எதிரொலியாக, சென்னையில் கைது செய்யப்பட்ட அவர், தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.

Kannan

தஞ்சாவூரில் திமுக ஆர்ப்பாட்டம்

தஞ்​சாவூரில் நடை​பெற்ற திமுக ஆர்ப்​பாட்​டத்​தில் ஆபாச​மாகப் பேசி​ய​தாக உதயநிதி மீது குற்​றம் சாட்​டப்​பட்டது, தவெகவினர் அளித்த புகாரின் பேரில், தஞ்சை போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை விரைந்தனர்.

உதயநிதியிடம் விசாரணை

நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டா​லின் வீட்டிற்கு சென்ற அவர்கள், பின்னர் விசாரணைக்காக அவரை தஞ்சாவூருக்கு வேனில் அழைத்து சென்றனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே பதற்றம் நிலவியது.

திமுக பொதுச் செய​லா​ளர் துரை​முரு​கன், முன்​னாள் அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, சபரீசன், கட்​சி​யின் சட்​டத் துறை நிர்​வாகி​கள் உட்பட பலர் உதயநிதி இல்​லத்​தில் குவிந்ததால் பரபரப்பு கூடியது.

உதயநிதி ஸ்டாலின் கைது

புகாரின் அடிப்​படை​யில், 9 பிரி​வு​களின் கீழ் உதயநி​திக்கு எதி​ராகப் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். காலை 10.30 மணிக்கு மேல் போலீசார் உதயநிதி ஸ்டா​லினைக் கைது செய்​து வேனில் ஏற்றினர்.

போலீசாருடன் திமுகவினர் தள்ளுமுள்ளு

உதயநி​தியை அழைத்​துச் சென்ற போலீஸ் வாக​னத்​தைத் தடுத்து நிறுத்​திய திமுக​வினர், அரசுக்கு எதி​ராகக் கோஷங்​களை எழுப்​பினர். வாக​னத்​தின் முன்​பாக சாலை​யில் படுத்தும் மறியல் செய்​தனர். இதனால் போலீ​சாருக்​கும் திமுக​வினருக்​கும் இடையே கடும் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

பல்வேறு இடங்களில் திமுகவினர் கைது

பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து போலீ​சார் அப்​புறப்​படுத்​தினர். இதனால் பதற்​றம் ஏற்​பட்​டது.

தவெகவினரும் போராட்டம்

உதயநிதி ஸ்டா​லின் பேச்​சுக்​குக் கண்​டனம் தெரி​வித்து தவெக​வினர் வடக்கு கடற்​கரை மற்​றும் பரங்​கிமலை பகு​தி​யில் போராட்​டம் நடத்​தினர்.

தஞ்சாவூரில் உதயநிதி

பலத்த பாது​காப்​புடன் உதயநிதி ஸ்டா​லின் தஞ்​சாவூர் அழைத்​துச் செல்​லப்​பட்​டார். மாலை 6.30 மணி​யள​வில் திருச்சி வழி​யாக உதயநி​தியை போலீ​ஸார் தஞ்சாவூர் அழைத்து வந்தனர். ஆனால், திடீரென செங்​கிப்​பட்டி காவல் நிலை​யத்​துக்​கு உதயநிதியை அழைத்துச் சென்​ற​னர்.

வேனில் காத்திருந்த உதயநிதி

அங்​கு, தனது வழக்​கறிஞர்​கள் வந்​தால்​தான் காவல் நிலை​யத்​துக்​குள் வரு​வேன் என்று கூறிய உதயநிதி வாக​னத்தை விட்டு இறங்​காமல் சுமார் அரை மணி நேரம் காத்​திருந்​தார். திமுக வழக்​கறிஞர்​கள் அங்கு வந்த பிறகு, வாக​னத்​தில் இருந்து உதயநிதி இறங்கி காவல் நிலை​யத்​துக்​குள் சென்​றார்.

போலீசார் விசாரணை

தஞ்​சாவூர் எஸ்​.பி. சுந்​தர​வதனம் முன்​னிலை​யில், தஞ்​சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்​வாளர் மணி​கண்​டன் விசா​ரணை நடத்​தி​னார். அப்​போது, போலீ​ஸாரின் கேள்வி​களுக்கு உதயநிதி பதிலளித்​தார்.

உதயநிதி விடுவிப்பு

சுமார் ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக நடை​பெற்ற விசா​ரணைக்​குப் பிறகு 8.15 மணி​யள​வில் உதயநி​தி​யைப் போலீ​ஸார் விடு​வித்​தனர்.

உதயநிதிக்கு முன்ஜாமின்

முன்​ன​தாக உதயநிதி ஸ்டா​லினுக்கு முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவசர மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த மனு மீது விசா​ரணை நடந்த போது, “தஞ்​சாவூரில் காவல் நிலைய விசா​ரணைக்​குப் பிறகு அவர் விடுவிக்​கப்​படு​வார். நீதி​மன்ற காவலுக்கு அனுப்​புவது எங்​கள் நோக்​கமல்ல” என்று அரசு தரப்​பில் கூறப்​பட்​டது.

அதைப் பதிவு செய்த நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், “உதயநி​தியை வி​சா​ரணை முடிந்​ததும்​ போலீ​ஸார்​ இன்​றே (நேற்​று) விடுவிக்​க வேண்​டும்​. உதயநி​தி ஸ்டா​லினும்​ போலீ​ஸாரின்​ வி​சா​ரணைக்​கு ஒத்​துழைக்​க வேண்​டும்​” என்​று உத்​தரவிட்​டார்​.

பரபரப்பான அரசியல் களம்

உதயநிதி கைது, விசாரணை, விடுவிப்பு, நீதிமன்ற உத்தரவு, திமுகவினர் மறியல், தவெகவினர் போராட்டம் என தமிழக அரசியல் களம் நேற்று மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.

========