தமிழ்ப்பேராய விருதுகள்
SRM University Announcement Of Tamil Perayam Awards 2025 : திரு. இராமசாமி நினைவு (SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கியம் மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்ப்பேராய விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகள், முன்னர் அறிவித்தப்படி வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி வழங்கப்படஉள்ளது.
விருதுகளின் பிரிவுகள்
சிறந்த தமிழ் நூல்கள், சிறந்த தமிழ் இதழ், சிறந்த தமிழ்ச் சங்கம், சிறந்த தமிழறிஞர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை அளித்தவர்களை கௌரவிக்கும் நோக்கத்துடன் வழங்கப்படுகின்றன என்று தமிழ்ப் பேராய விருதுகள் அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் சுமார் 20 லட்சம் பெுருமானம் இருக்கும்.
விருது பெறுபவர்கள்
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்குவது குறித்து செய்தியளார்களை சந்தித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகப்பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி விருதுக்குத் தேர்வானவர்களின் பெயர்க்ளை அறிவித்தார்.
தமிழ்ப்பேராய உறுப்பினர்கள்
தமிழ்ப்பேராயத் தலைவர் முனைவர் கரு. நாகராசன் அவர்கள் தமிழ்ப்பேராயப் பணிகள், தமிழ்ப்பேராயவிருதுகளின் சிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்துரைத்ததை தொடர்ந்து, தமிழ்ப்பேராயச் செயலர் முனைவர் பா. ஜெய்கணேஷ் அவர்கள் நன்றியுரை கூறினார்.
விருது பெறுபவர்களின் பட்டியல்
1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - பெரியம்மை எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித்
2. பாரதியார் கவிதை விருது - கண்ணாடியில் தெரியும் பறவை கவிஞர் இளம்பிறை
3. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - கண்ணாடி கிரகத்தின் கவலை எழுத்தாளர் மருதன்
4. ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது -அற்புத திருவந்தாதி டி.எம்.டி.- கே. நாராயணனன்
5.ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல்தமிழ் மற்றும்தொழில்நுட்ப விருது - நிலவு எனும்கனவுமுனைவர் பெ. சசிக்குமார்
6.பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது -எகிப்தில் தமிழர் நாகரிகம்எழுத்தாளர் அமுதன்
7.முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது -பெண் எனும் போர்வாள்எழுத்தாளர் பிருந்தா சீனிவாசன்
8.சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது -மகாகவிஆசிரியர் : வதிலை பிரபா
9. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது -திருவள்ளுவர் இலக்கிய மன்றம்தலைவர் : திரு. செல்லப்பன்
10.அருணாசலக் கவிராயர் விருது -ஆதித்தமிழர் கலைக்குழுநிறுவனர் : அ. வினோத்
11.பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள்சாதனையாளர் விருது-முனைவர் கோ. தெய்வநாயகம்
மேலும் படிக்க : அகில இந்திய விருதுகள் : பட்டியலில் முக்கிய திரைப்பிரபலங்கள்..!
பரிசுத்தொகை
முதல் ஏழு விருதுகளுக்குரிய விருதாளர்களுக்கு ரூ. 1,00,000 பரிசுத் தொகையாக வழங்கப்படுவதோடு அந்தநூல்களைப் பதிப்பித்த பதிப்பாளர்களுக்கு ரூ. 20,000வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், முத்துத்தாண்டவர் தமிழிசை விருதிற்குப்போதிய எண்ணிக்கையிலான தரமான நூல்கள் வராததால்இவ்வாண்டு அந்த விருது அளிக்கப்படவில்லை. சிறந்தஇதழ், தமிழ்ச் சங்கம், கலைக்குழுவிற்கு ரூ. 50,000வழங்கப்படும். பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரூ. 3,00,000 வழங்கப்படும்.