"Stalin and Udhayanidhi deliberately making slanderous remarks against me," condemns EPS  google
தமிழ்நாடு

ஸ்டாலின், உதயநிதி திட்டமிட்டு அவதூறாக பேசுகிறார்கள் : பரப்புரையில் இபிஎஸ் கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி , ஸ்டாலின், உதயநிதி என்னை திட்டமிட்டு அவதூறாக பேசுகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்

Rohini

தீவிர தேர்தல் பரப்புரை

வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர கட்சி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறர் எடப்பாடி பழனிசாமி ,அதிமுக கூட்டணி கட்சியில் உள்ள வேட்பாளர்களையும் ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

முதல்வருக்கு கண்டனம்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி , தொடர்ந்து பேசிய நிலையில் , முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி என்னை திட்டமிட்டு அவதூறாக பேசிகொண்டிருக்கிறார்கள்.

நான் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டம் தெரிவித்துள்ளார்.

உயிரை பற்றி கவலை இல்லை ,மக்களுக்காக இருப்பேன்

தொடர்ந்து பேசிய எடப்பாடி நான் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அது எல்லாவற்றிற்கும் தகுந்த பதிலடி உடனுக்குடன் கொடுப்பேன்.

கொரோனா காலகட்டத்தில் கூட நான் 32 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள், சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், பல தரப்பட்ட தொழில் செய்யும் அனைத்து மக்களையும் நேரடியாக காலத்துக்கே சென்று உரையாடியவன் நான்,

எனக்கு என் உயிரை பற்றி கவலை இல்லை . எனக்கு மக்களின் நலமே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையில் விளம்பரங்களை தேடவில்லை நான் :எடப்பாடி

உங்களைப் போன்று போட்டோஷூட் நடத்தி பத்திரிகைகளில் விளம்பரத்தைத் தேடவில்லை. மக்களுக்காக உழைத்தேன் அதனால்தான் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் தற்போதும் வர்ணிக்கிறார்கள் என்று தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தில் குற்றம் சாட்டினார் .

மழை பெய்தால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் மழை நீர் தங்காது என உதயநிதி வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது. அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? என்ற கேவிகளையும் முன்வைத்தார்

அதிமுகவில் தலைமை இருந்தால் பதவிக்கு வரலாம்

கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் ஒருவர் அமைச்சராக முடியும், துணை முதல்வர் ஆக முடியும், அதுக்கு மேல் உயர்ந்த பதவிகளில் அதிகாரத்துக்கு வர முடியும். ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. தலைமைக்கு உண்மையாக இருந்தால் , பொதுச்செயலாளராக கூட ஆக முடியும்.

சாதாரண தொண்டன் கூட உழைத்தால் முதல்வராக முடியும். அப்படியான இயக்கமே அதிமுக என்று பரப்புரையில் பேசினார்

கடன் வாங்கி தமிழகத்தை, கடனில் ஆழ்த்தியுள்ளனர்

கடன் வாங்குவதில் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி, மக்களை கடன்காரர்கள் ஆக்கிவிட்டுள்ளனர். என்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைமை முற்றிலும் மாறும் என்று உறுதியளித்து உரையாடினர்