மெட்ரோ ரயில் பயணம்
சென்னையின் இன்று மெட்ரோ ரயிலில் பயணித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது பயணம் மற்றும் மெட்ரோ ரயில் தொடர்ப்பாகவும் ,சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரைல் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.
2 ம் கட்ட திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும்
விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது,
இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும் என்றும் பதிவிட்டுள்ளார்