சிறப்பாக களம் காணும் csk அணி
ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக சிறப்பாக களம் காணும் அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது இந்த அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதோடு பல்வேறு முறை பிளே-ஆப் சுற்றிலும் விளையாடி உள்ளது.
கடைசியாக கடந்த 2023-ல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே. அதற்கடுத்த மூன்று சீசன்களாக அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் இந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஸ்டீபன் பிளெமிங்
இரு தரப்பின் முடிவே
இந்த முடிவானது csk அணியிடமும் ,ஸ்டீபன் பிளெமிங் தரப்பிடமும் இருந்து முழுமையாக கலந்தாலோசித்த பிறகு இந்த இறுதி முடிவானது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
யார் இந்த பிளெமிங்
கடந்த 2008 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் ஸ்டீபன் பிளெமிங்.அதன் பின்னர் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்
2009 சீசன் முதல் 2026 சீசன் வரையில் அந்தப் பொறுப்பில் அவர் தொடர்ந்தார். இதில் ஐபிஎல் பட்டம் மட்டுமல்லாது சாம்பியன்ஸ் லீக் பட்டமும் இரண்டு முறை சிஎஸ்கே வென்றுள்ளது. 12 முறை பிளே-ஆப் மற்றும் 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே களம் கண்டிருந்த்து குறிப்பிடத்தக்கது
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்ச்சியாளராகவும் செயல்பட்டவர்
csk அணியின் பயிற்சி பொறுப்பாளாராக மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வகித்து வரும் எஸ்ஏ20 தொடரில் ஜேஎஸ்கே அணி மற்றும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளராகவும் பிளெமிங் செயல்பட்டார்.
தற்போது இந்த பொறுபுகளில் இருந்து விலகி கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
தனது பயணம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்திருக்கும் ஸ்டீபன் பிளெமிங்
இந்த பதவி பொறுப்பில் இருந்து விலகியது குறித்து பிளெமிங் கூறியதாவது ,18 ஆண்டுகள் என்பது விளையாட்டு வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று.
நன்றியுடன் விடைபெறுகிறேன். பயிற்சியாளராக எனது பயணத்தில் சிஎஸ்கே உடனான பயணம் சிறப்பானது. அதன் மூலம் நாங்கள் சாதித்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அந்த நினைவுகள் எனது நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்” என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.
=================