Storm signal formed in the Arabian Sea: Will Tamil Nadu receive more rain in summer?  google
தமிழ்நாடு

அரபிக்கடலில் உருவாகும் புயல் சின்னம் : கோடையில் அதிகமான மழையை பெறும் தமிழகம்? : முன்கூட்டியே பருவமழை!

அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

Rohini

வானிலை மையத்தின் தகவல்

இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் , இது மே மாதம் இரண்டாவது வாரத்தில் புயலாக உருவாகும் கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது

உச்சத்தில் வெப்பம்

கடந்த சில தினங்களாக திங்கத்தின் பல்லவேறு பதிகளிலும் வெப்பநிலையானது வட்டி வதைத்து வருகிறது , குறிப்பாக தமிழக்தின் வேலூர் , திருச்சி போன்ற அப்பகுதிகளில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது .

இந்த நிலையில் வானிலை மையம் இன்று மழைக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது

முன்னக்கூட்டியே தென்மேற்கு மழை

இன்று வானிலை மையம் அறிவித்துள்ள அறிவின்படி . தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமலையானது இந்த ஆண்டு முன்கூட்டியே தமிழகம் அந்த மலையை பெரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் வெப்பம் தணிய வாய்ப்பு இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை ; மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மழை பெரும்

இந்த அரபிக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பகுதிகள் அதிக மழையை பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய வானிலை நிலவரப்படி

நேற்றைய வானிலை நிலவரப்படி தமிழகத்தை பொறுத்த வரையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது என்றும்,

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது

கனமழையும் பெய்யக்கூடும்

குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

==============