கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர்
கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோர் , பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என் முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளார்
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார்கள். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) திருமதி. சி. ராஜேஸ்வரி, இ.கா.ப., காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) திரு. ஆஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறை தலைவர் (சிங்கப்பெண்) திருமதி. கே. பவானீஸ்வரி, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
======================