Students should make the most of their summer vacation: School Education Department instructions  google
தமிழ்நாடு

கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாணவர்கள் மாற்ற வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்!

கோடைகால விடுமுறையானது நாளை முதல் தொடங்கும் நிலையில் மாணவர்கள் , விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அறிவுரை வழங்கியுள்ளார்.

Rohini

கோடை விடுமுறை ஆரம்பம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறையானது தொடங்குகிறது ,இந்த நிலையில் , தமிழா பள்ளி கல்வி துறை இயக்குனர் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பெற்றோர்கள் , மாணவர்களின் கவனத்திற்கு

இது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனர்ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடை விடுமுறை தொடங்கும் நிலையில்பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்

அதன்படி, மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம் என்றும்

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால்வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிகளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிர்க்கவும் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மன நலன்களை பாதுகாக்கவும் கவனம் செலுத்துங்கள்

விடுமுறை நாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதை சரியாகக் கையாள வேண்டும் என்று இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

அதன்படி தனிமை உணர்வுகளைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளைக் கவனித்தல்

ஆகியவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநலனைப் பேணவும் முடியும். டி.வி, செல்போன் ஆகியவற்றைப் பார்ப்பதில் அதிகமான நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும் envaumஅறிவுறுத்த வேண்டும்.

படிப்பதை ஊக்குவிக்க வேண்டும்

மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். எனவே பராம்பரிய உணவு வகைகளைத் தரவேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழ வகைகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

இதுதவிர மாணவர்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆர்வமுள்ளவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்

அவர்களின் ஆர்வங்களைப் பொருத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறார் கதைகள் மற்றும் நீதி நூல்களைப் படிக்க அறிவுறுத்த வேண்டும்.மேலும் குழந்தைகளின் ஆர்வம் மிகுந்த வற்றை தெரிந்து கொண்டு அவற்றிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்

அதாவது இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

தினமும் இருவேளை பல் துலக்கி, குளித்தல் போன்ற பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும். பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்க வேண்டும் என இவ்வாறன அறிவுறுத்தல்களை பள்ளி கல்வி துறை இயக்குனரகம் வழங்கியுள்ளது.

==========