sudden surge of political interest among school students, arrival of actor Vijay, is constructive or dangerous google
தமிழ்நாடு

”குழந்தைகள், மாணவர்களை அரசியல்படுத்துகிறாரா விஜய்!” : ஆக்கமா? ஆபத்தா? : பெற்றோர்கள் குழப்பம்...

TVK Vijay Vellore Meeting : நடிகர் விஜயின் வருகையால், பள்ளி மாணவர்களிடையே திடீரென ஏற்பட்டு இருக்கும் அரசியல் ஆர்வம், ஆக்கப்பூர்வமானதா? அல்லது ஆபத்தானதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

Kannan

அரசியல் களத்தில் தமிழ் சினிமா

TVK Vijay Vellore Meeting Speech : சுதந்திர இந்தியாவில் தமிழக அரசியல் களம் எப்போதும் சினிமாவிற்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழக அரசியலில் திரை பிரபங்களில் பங்களிப்பும், தலையீடும் அதிகம் தான்.

அரசியலில் திரைப் பிரபலங்கள்

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என திரைத் துறைத்துக்கும் தமிழக அரசியலுக்குமான தொடர்பு நீள்கிறது. அதுமட்டுமின்றி தேர்தல் நேரத்தில் மட்டும், ஒவ்வொரு கட்சிக்கும் பிரச்சாரம் செய்வதற்காக திரளும் திரைப் பிரபலங்களும் தமிழகத்தில் உண்டு.

அல்டிமேட் ஹீரோ விஜய்

அந்தவகையில், தமிழ் திரையில், நடிகர் விஜயின் வீச்சு பெரியது தான். அவருக்கான மார்க்கெட்டிங் வேல்யூ, ரசிகர்கள் பட்டாளம் வேறு லெவல் என்பதை மறுக்க முடியாது. சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் ஹீரோ தான் விஜய். திரையில் கொண்டாடித் தீர்க்கப்படும் விஜய், அரசியல் காலடி வைத்து தவெக என்ற கட்சியை தொடங்கி, முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறார்.

மாணவர்களின் அரசியல் ஆர்வம்

விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம், வீட்டுக்கு வீடு இருக்கும் பள்ளிக் குழந்தைகள், ஓட்டுரிமை கூட இத்தா குட்டீஸ்கள் வரை ‘விஜய்க்கு ஓட்டுப்போட வேண்டும்’ என்று பெற்றோர்களுக்கு கட்டளை இடுகின்றனர். மாணவர்களின் இந்த திடீர் அரசியல் ஆர்வம் தான் வியப்பை ஏற்படுத்துகிறது.

விஜய்க்கு கூடும் கூட்டம்

விக்கிரவாண்டி மாநாடு தொடங்கி வேலூர் நிர்வாகிகள் கூட்டம் வரை, விஜய்க்கு கூடும் கூட்டம் வியப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

வியப்பிற்கு காரணம் தானாக கூடும் கூட்டம், அச்சத்திற்கு காரணம் இது நலத்தா அல்லது தீமையா என்பது தான். பள்ளி மாணவர்களும் கூட்டத்திற்கு வருவது சரியானதா என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

வீட்டுக்கு வீடு விஜய்

வீட்டுக்கு வீடு விஜய்க்கு ஓட்டு இருக்கிறதா என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். ஆனால், வீடுதோறும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஈர்ப்பை ஏற்படுத்தும் பேச்சு

அரசியலின் அடிச்சுவடு தெரியாத பள்ளிக் குழந்தைகள் கூட, விஜய்க்காக நிற்கிறார்கள். காரணம் விஜய் அவர்கள் மொழியில் பேசுகிறார். திரையில் பேசுவது போல பொதுவெளியில் அவர் விமர்சனங்களை ஏற்ற இறக்கங்களோடு முன்வைப்பது, பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

‘நான் உச்ச நட்சத்திரமாக இருக்கிறேன், அதை உதறிவிட்டு உங்களுக்காக வருகிறேன்’ என்று அவர் பன்ச் வைக்கும் வசனங்கள், மாணவர்களை ஈர்த்து, வீட்டில் பெற்றோரையும், பெரியவர்களையும் விஜய்க்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சொல்ல வைக்கிறது.

ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் அதை அமைப்பு ரீதியாக வலிமைப்படுத்தியதை விட, ரசிகர்கள் இடையே அதிகமான பிணைப்பை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்று இருக்கிறார் விஜய். கொள்கையை கொண்டு சேர்ப்பதை விட, விஜயை ஒருமுறை பார்த்து விட மாட்டோமா? என்று ஏங்கும் மக்களை நோக்கி நகர்ந்து வருகிறார் அவர்.

ஜென்ஸீ விரும்பும் விஜய்

விஜய் மீது பள்ளி செல்லும் மாணவர்கள் மட்டுமல்ல ஜென்ஸீ( GenZ) எனப்படும் 1997 முதல் 2012 வரை பிறந்த தலைமுறையினருக்கும் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது. இளம் வயதில் அரசியல் கற்பது என்பதில் தவறில்லை.

அரசியல் சினிமாடிக் கிடையாது

அது வளர்ந்து நிற்கும் போது, சித்தாந்தத்தை தீர்மானிக்க உதவும். அரசியல் என்பது ஒரு ஹீரோவை கொண்டாடுவது மட்டும் கிடையாது. மாநிலத்தின் பிரச்னைகள், பொருளாதாரத்தை உள்ளடக்கியது என்பதை மறந்து விடக்கூடாது.

வீடுகளிலும் அரசியல் பேச்சு

விஜய் வருகை வீடுகளில் பெரியவர்கள் பேசும் அரசியல் என்பது, இப்போது சிறுவர்கள் வரை கடத்தப்பட்டு குழந்தைகளும், பெண்களும் தேர்தல் பற்றி பேசவைத்து இருக்கிறது. பக்கத்து மாநிலமான கேரளாவில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் அரசியல் சார்பெடுப்பது இயல்பாக பார்க்கப்படுகிறது.

நெறிப்படுத்தல் அவசியம்

ஆனால் அங்கு பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேச தடை இருக்கிறது. அரசியல் என்றால் என்ற அறிவை பெற மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

விஜன் வருகையும் பள்ளி மாணவர்களின் திடீர் அரசியல் ஆர்வமும் பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இது நெறிப்படுத்தப்படா விட்டால், பெரிய ஆபத்தில் முடியும்.

அச்சத்தில் ஆளுங்கட்சி

தமிழக தேர்தல் களத்தில் ‘நான்தான் மாற்று’ என்று விஜய் தொடர்ந்து முழங்கி கொண்டே இருக்கிறார். அதை ஒரு பெருங்கூட்டம் செவிமடுத்து ஏற்கிறது.

இது ஆளுங்கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அரசுக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்குதான்.

தமிழக கட்சிகளுக்கு சவால்

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள தெரியும். முழுமையாக அரசியல் மயமாக்கப்படாத தலைவரையும், கூட்டத்தையும் கொண்ட எதிர்கொள்வது என்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

பெற்றோர்களுக்கு இருக்கும் சாய்ஸ்

இந்த மாதிரியான தெளிவற்ற சூழலில் பெற்றோர் பிள்ளைகள் சொல்வதை கேட்டுக் கொண்டு தாங்கள் நினைப்பதைச் செய்வது,

இல்லை எனில் பிள்ளைகளால் கவரப்பட்டு அவர்கள் விருப்பப்படியே நடப்பது. மாணவர்களின் அதீத ஆர்வம் ஆரோக்கியமானதா? ஆபத்தானதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

====