Summer vacation for students from April 17; School Education Department announces  google
தமிழ்நாடு

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்​களுக்கு ஏப்.17ம் தேதி முதல் கோடை விடுமுறை : பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை பள்ளி கல்வி துறை அறிவித்திருக்கிறது.

Rohini

கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் பயிலும் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறையை அறிவித்திருக்கிறது.

பள்ளி கல்வி இயக்குநரகத்தின் சுற்றறிக்கை

பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள் மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு நேற்று அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளதாவது ,

பள்​ளிக் கல்​வித் துறை கட்​டுப்​பாட்​டின் கீழ் செயல்​படும் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​கள் மற்​றும் தனி​யார் சுயநிதி பள்​ளி​களில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்​கான இறு​தித் தேர்​வு​கள் ஏப்.16-ம் தேதி முடிவடைந்து , கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

17ம் தேதி முதல் பள்ளி மாணவர்​களுக்கு மட்​டும் கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ,அதே வேளை​யில், வரும் 25-ம் தேதி வரை அரசு மற்​றும் அரசு உதவி​பெறும் தொடக்க, நடுநிலை, உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் பணிபுரி​யும் எல்​கேஜி, யுகேஜி

ஆசிரியர்​கள் உள்பட அனைத்து ஆசிரியர்​களும் பள்​ளிக்கு வந்து விடைத்​தாள் மதிப்​பீடு, மாணவர் சேர்க்கை பணி, நிர்​வாகப் பணி​கள் மற்​றும் தேர்​தல் பணி​களை மேற்​கொள்ள வேண்​டும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது

புதிய பாட நூல் அறிமுகம் ;ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்​ளி​களுக்கு வரும் கல்வி ஆண்​டுக்​கான (2026-27) வகுப்பு ஜூன் 1-ம் தேதி தொடங்​க இருக்கும் நிலையில் . வரும் கல்​வி​யாண்டு முதல் ஒன்று முதல் 3-ம் வகுப்பு பயிலும் குழந்​தைகளுக்கு புதிய பாடநூல்​கள் அறி​முகப்​படுத்​தப்​படு​வ​தால்,

இந்த வகுப்​பு​களை கையாளும் ஆசிரியர்​களுக்கு ஜூன் 1 முதல் 3 வரை மாவட்ட அளவில் பணி​யிடை பயிற்சி அளிக்​கப்​படும். என்று பள்ளிகல்வி துறை தெரிவித்துள்ளது