அதிமுகவில் பிளவு ,தவெகவில் இணைந்த அமைச்சர்கள்
சட்டமன்ற தேர்தலுக்கும் பிறகு அதிமுக கட்சிக்குள்ளையே பிளவானது ஏற்பட்டது , இது அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பான சூழலையே உருவாக்கியிருந்தது .
குறிப்பாக அதிமுகவிற்குள்ளையே இருந்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்கொடி தூக்கியிருந்தனர் . இது அரசியல் வட்டராங்களில் பெரும் பதற்ற சூழலை ஏற்படுத்தியிருந்தது
அதிமுகவில் இணைந்த எஸ்பி வேலுமணி தரப்பு
பல்வேறு குறுபடிகள் மற்றும் அரசியல் வட்டார எதிர்ப்பார்ப்பிற்கு இடையே அதிமுகவில் இரு அணிகளாக இருந்த எஸ்பி வேலுமணி தர்ப்பு அதிமுகவில் இணைந்துள்ளது . இதில் சி வி சண்முகம் தரப்பு மட்டும் தனித்து நிற்கிறது
தவெகவிற்கு அதரவளித்ததிற்கு மன்னிப்பு கோரிய எஸ்பி வேலுமணி தரப்பு
இந்த நிலையில் கடந்த மே 27 அன்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினர், கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு வருத்தம் தெரிவித்து, முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கியிருந்தனர் .
புகாரை திரும்ப பெற்ற கொறடா
இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி. வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் நேரில் சந்தித்து, தாங்கள் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.
தகுதி நீக்க நடவடிக்கை இல்லை : ஜே.சி.டி. பிரபாகர்
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜே.சி.டி. பிரபாகர், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்
தகுதி நடவடிக்கை ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது
இது குறித்து பேசிய சபாநாயகர் ,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய நான்கு கடிதங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. அவரின் கடிதங்களில் 13.5.2026 அன்று 21 உறுப்பினர்கள் வாக்களித்ததை மன்னிப்பதாக கூறியதால், இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன் என்றும்
மேலும், 21 உறுப்பினர்கள் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் அரசியலமைப்புச் சட்டம் பத்தாவது அட்டவணையின் கீழ் கைவிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
மீதமுள்ள 4 பேர் மீது நடவடிக்கை தொடரும்
மொத்தமுள்ள 25 பேரில் 21 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 உறுப்பினர்கள் தகுதிநீக்கம் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை தலைவர் தெரிவித்துள்ளார்
முறையாக மனு அளிக்கப்பட்டதால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
விதியின் படி, 30 நாள்களுக்குள் மன்னிப்பு வழங்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் கடிதம் வழங்கியதால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்
அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தொடர்பாக எந்த கடிதமும் இன்னும் அளிக்கப்படவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
=====================