swine flu spreading rapidly in Tamil Nadu, Health Department warned immediate medical treatment  AI generated
தமிழ்நாடு

வேகமாக பரவும் ”பன்றிக்காய்ச்சல்” : அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சை : பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...!

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Kannan

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல்

Tamil nadu Swine Flu H1N1 : Health Department Alert : காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாகும்.

வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்

கொரோனாவை போல பல்வேறு வைரஸ்கள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, H1N1 வகையைச் சேர்ந்த பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலும் பெரும் பாதிப்பு

டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பல மடங்கு அதிகரிப்பு

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நோயாளிகள் எண்ணிக்கை உயர்வு

இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

பன்றிக்காய்ச்சல் அறிகுறி

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாகும்.

இது மட்டுமில்லாமல் சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

அலட்சியம் வேண்டாம்

லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எந்தவொரு மருந்தகங்களிலும் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்செலுத்தும் சுய மருத்துவத்தைத் (Self-medication) கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை

பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகி, உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமே பன்றிக்காய்ச்சில் தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்று பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

=============