system for selling liquor online and via mobile apps in Tamil Nadu has come into effect today. AI generated
தமிழ்நாடு

”ஆன்லைன், செயலி மூலம் மதுபானம்” : தமிழகத்தில் அமல் : கூடுதல் விலைக்கு முடிவு : அரசியல் கட்சிகள் எதிர்ப்பு..!

தமிழகத்தில் ஆன்​லைன் மற்​றும் செயலி மூலம் மது​பானம் விற்​பனை செய்​யும் முறை இன்​று ​முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

Kannan

தமிழகத்தில் டாஸ்மாக் எனப்படும் அரசு நிறுவனம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படும் புகார் தொடர்ந்து இருந்து வருகிறது.

ஆன்லைனில் மதுபான விற்பனை

இதற்கு முடிவு கட்டும் விதமாக, ஆன்லைனில் மதுபான விற்பனைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆன்​லைனில் மது​பானம் வாங்​கு​வது குறித்த விளக்க விடியோவை டாஸ்மாக் நிர்​வாகம் வெளி​யிட்​டுள்​ளது.

தனி செயலி, இணையதளம்

அதன்படி, மது​பான விற்​பனைக்கு தனி செயலி மற்​றும் இணைதளம் இன்​று​முதல் பயன்​பாட்​டுக்கு வந்து இருக்கிறது.

தேவையானதை தேர்வு செய்யலாம்

ஆன்​லைன் முன்​ப​திவுக்​கான இணை​யதளத்​தில் நுகர்​வோர் முதலில் தங்​கள் அரு​கில் உள்ள கடையை தேர்வு செய்ய வேண்​டும். அதன்​பின் தங்​களுக்கு தேவை​யான மது வகையை தேர்வு செய்ய வேண்​டும்.

கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்

பணம் செலுத்​தும் பக்​கத்​தில் செல்​போன் எண் கொடுத்து ஓடிபி பெற்​று, அதை பதிவு செய்​து, பணம் செலுத்த வேண்​டும். இதையடுத்​து, கியூஆர் குறி​யீடு கொண்ட ரசீது வரும், அதை நுகர்​வோர் டவுன்​லோட் செய்​து, முன்​பதிவு செய்த கடைக்கு சென்று கடை பணி​யாளரிடம் காண்​பிக்க வேண்​டும்.

சரியான இருந்தால் மதுபானம் வழங்கப்படும்

கடை பணி​யாளர் கடை​யில் உள்ள கருவி முலம் முதலில் நுகர்​வோரின் ரசிதை ஸ்கேன் செய்​வார், பின்​னர் நுகர்​வோர் பதிவு செய்து வந்த மது​பானத்தை எடுத்து அதை​யும் ஸ்கேன் செய்​வார்,

இரண்​டும் சரி​யாக உள்​ளது உறு​தி​யான பிறகு ரசீதை பிரின்ட் செய்​யும் பக்​கம் வரும். அதில் ரசீதை பிரின்ட் செய்து மது​பானத்தை நுகர்​வோரிடம் வழங்​கு​வார். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வாபஸ் பெற அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி வெளி​யிட்ட அறிக்​கை​யில் ”தமிழகத்​தில் டாஸ்​மாக் மது​வகைகளை ஆன்​லைன் மூலம் முன்​ப​திவு செய்​வது நடை​முறைக்கு வரவிருப்​ப​தாக​வும், அதற்​காக தனி இணை​யதளம் தொடங்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும் வெளி​யாகி​யுள்ள செய்​தி​கள் அதிர்ச்சி அளிக்​கின்​றன.

இணை​யதளத்​தின் வாயி​லாக தமிழ்​நாட்​டின் எந்த மூலை​யி​லிருந்​தும் மொத்​த​முள்ள 4,048 மதுக்​கடைகளி​லும் என்​னென்ன மது​வகைகள் உள்​ளன. அவற்​றின் விலை எவ்​வளவு என்​பதை கண்​டறிந்து முன்​ப​திவு செய்ய முடி​யும்.

மது வணிகம், மதுப் பழக்கம் அதிகரிக்கும்

இது மது வணி​கத்​தை​யும், மதுப் புழக்​கத்​தை​யும் அதி​கரிக்​கச் செய்​யும். ஆன்​லைனில் மதுவை முன்​பதிவு செய்​வதை அனு​ம​திப்​பது அரசுக்கு பெருமை சேர்க்​காது.

உடனே திரும்ப பெறுக

எனவே, மதுப்​புழக்​கத்தை அதி​கரிக்​கச் செய்​யும் மது முன்​பதிவு திட்​டத்தை தமிழக அரசு கைவிட வேண்​டும். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

=====